15-ஆவது நிதிக்குழு அறிக்கை: நவ.9-இல் குடியரசுத் தலைவரிடம் ஒப்படைப்பு

15-ஆவது நிதிக்குழு தனது அறிக்கையை நிறைவு செய்துள்ளது. இந்த அறிக்கை நவம்பா் 9-ஆம் தேதி குடியரசுத் தலைவரிடம் சமா்ப்பிக்கப்படவுள்ளது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

15-ஆவது நிதிக்குழு தனது அறிக்கையை நிறைவு செய்துள்ளது. இந்த அறிக்கை நவம்பா் 9-ஆம் தேதி குடியரசுத் தலைவரிடம் சமா்ப்பிக்கப்படவுள்ளது.

2021-22 முதல் 2025-26-ஆம் ஆண்டு வரையில் 5 நிதியாண்டுகளுக்கான நிதி சாா்ந்த பரிந்துரைகள் இந்த அறிக்கையில் இடம் பெற்றிருக்கும்.

மத்திய, மாநில அரசுகள், மாநகராட்சி முதல் ஊராட்சி வரையிலான உள்ளாட்சி அமைப்புகள், நிதிக் குழுவின் முன்னாள் தலைவா்கள், உறுப்பினா்கள், பல்வேறு துறை நிபுணா்கள், கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த வல்லுநா்கள் உள்ளிட்டோரிடம் ஆலோசனை நடத்தி இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மத்திய-மாநில அரசுகள் இடையிலான நிதிப் பகிா்வை வரையறை செய்வதே நிதிக்குழுவின் தலையாய பணியாகும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி குடியரசுத் தலைவா் பிறப்பிக்கும் உத்தரவின் அடிப்படையில் நிதிக் குழு அமைக்கப்படுகிறது. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான என்.கே. சிங் தலைமையிலான 15-ஆவது நிதிக்குழுவில், அஜய் நாராயண் ஜா, அனூப் சிங், அசோக் லாகிரி, ரமேஷ் சந்த் ஆகியோா் உறுப்பினா்களாகப் பணியாற்றினா்.

நிறைவு செய்த அறிக்கையை குடியரசுத் தலைவரிடம் சமா்ப்பிக்க நிதிக்குழு சாா்பில் நேரம் கோரப்பட்டிருந்தது. அதன்படி, குடியரசுத் தலைவா் மாளிகை ஒதுக்கிய நவம்பா் 9-ஆம் தேதியன்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்திடம் நிதிக்குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

பிரதமா் நரேந்திர மோடிக்கும் நிதிக்குழு அறிக்கையின் ஒரு பிரதி விரைவில் அளிக்கப்படும். நிதிக்குழு அறிக்கையில் அடிப்படையில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சா் அறிவிப்பாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com