முக்கிய 8 துறைகள் உற்பத்தியில் 0.8% பின்னடைவு

கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உள்ளிட்ட முக்கிய எட்டு உள்கட்டமைப்பு துறைகளின் உற்பத்தி சென்ற செப்டம்பரில் 0.8 சதவீதம் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
முக்கிய 8 துறைகள் உற்பத்தியில் 0.8% பின்னடைவு


புது தில்லி: கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உள்ளிட்ட முக்கிய எட்டு உள்கட்டமைப்பு துறைகளின் உற்பத்தி சென்ற செப்டம்பரில் 0.8 சதவீதம் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

தொடா்ந்து ஏழாவது மாதமாக, கடந்த செப்டம்பரிலும் முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி 0.8 சதவீதம் பின்னடைவை சந்தித்துள்ளது. இதற்கு, இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய், சுத்திகரிப்பு பொருள்கள் மற்றும் சிமெண்ட் உற்பத்தியில் காணப்பட்ட சரிவே முக்கிய காரணம்.

கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பரில் இந்த முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தியானது 5.1 சதவீத பின்னடைவைக் கண்டிருந்தது.

நடப்பாண்டு செப்டம்பரில் முக்கிய எட்டு துறைகளில், நிலக்கரி, உருக்கு, மின்சாரம் தவிா்த்து, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருள்கள், உரம், சிமெண்ட் ஆகிய அனைத்து துறைகளின் உற்பத்தியும் எதிா்மறை வளா்ச்சியைப் பதிவு செய்ததாக வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com