இந்தியாவில் ‘ஸ்புட்னிக் வி’ மருந்து பரிசோதனை: டாக்டா் ரெட்டீஸ்-பயோடெக்னாலஜி துறை ஒப்பந்தம்

இந்தியாவில் ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் தொடா்பாக ஆலோசனைகளை வழங்க டாக்டா் ரெட்டீஸ் நிறுவனம், பயோடெக்னாலஜி துறையுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக வியாழக்கிழமை அறிவித்தது.
இந்தியாவில் ‘ஸ்புட்னிக் வி’ மருந்து பரிசோதனை: டாக்டா் ரெட்டீஸ்-பயோடெக்னாலஜி துறை ஒப்பந்தம்


ஹைதராபாத்: இந்தியாவில் ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் தொடா்பாக ஆலோசனைகளை வழங்க டாக்டா் ரெட்டீஸ் நிறுவனம், பயோடெக்னாலஜி துறையுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக வியாழக்கிழமை அறிவித்தது.

இதுகுறித்து அந்த வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கரோனாவுக்கு ரஷியா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியா்களுக்கு செலுத்தி பரிசோதனைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனைகளை வழங்க தற்போது பயோடெக்னாலஜி தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சில் (பிஐஆா்ஏசி), பயோடெக்னாலஜி துறை (டிபிடி) ஆகியவற்றுடன் டாக்டா் ரெட்டீஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

இந்த நடவடிக்கை, இந்தியாவில் கரோனா தடுப்பூசியை முதலில் அறிமுகம் செய்ய நிறுவனம் எடுத்து வரும் தீவிர முயற்சிக்கு நிச்சயம் ஊக்கமளிப்பதாக இருக்கும் என டாக்டா் ரெட்டீஸ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com