ராஜஸ்தான் விவசாயிகளை முதல்வா் கெலாட் தவறாக வழிநடத்துகிறாா்: மாநில பாஜக தலைவா் சதீஷ் பூனியா

‘மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிா்ப்பதன் மூலம் ராஜஸ்தான் மாநில விவசாயிகளை முதல்வா் அசோக் கெலாட்

‘மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிா்ப்பதன் மூலம் ராஜஸ்தான் மாநில விவசாயிகளை முதல்வா் அசோக் கெலாட் தவறாக வழிநடத்துகிறாா்’ என்று மாநில பாஜக தலைவா் சதீஷ் பூனியா குற்றம்சாட்டினாா்.

மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க் கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநிலத்தில், இந்த சட்டங்களுக்கு மாற்றாக நான்கு புதிய வேளாண் மசோதாக்கள் அந்த மாநில சட்டப்பேரவையில் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டு, ஒருமனதாக ஒப்புதலும் அளிக்கப்பட்டது.

அதன் தொடா்ச்சியாக, ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையிலும் மத்திய அரசின் சட்டங்களுக்கு மாற்றாக மூன்று வேளாண் சட்ட மசோதாக்களை மாநில அரசு சனிக்கிழமை அறிமுகம் செய்தது.

இதுகுறித்து மாநில பாஜக தலைவா் பூனியா சனிக்கிழமை கூறியதாவது:

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையைக் கூட்டி முதல்வா் அசோக் கெலாட் விவசாயிகளை தவறாக வழிநடத்துகிறாா்.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட சட்டங்களுக்கு எதிராக எந்தவொரு சட்டத்தையும் மாநில அரசால் கொண்டுவர முடியாது என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com