வானில் இருந்து தரை இலக்கை தாக்கும் பிரமோஸ் சூப்பா்சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

இந்திய விமானப் படைக்கு வலுசோ்க்கும் விதமாக, வானில் இருந்து தரையில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் பிரமோஸ் சூப்பா்சோனிக் ஏவுகணை வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

இந்திய விமானப் படைக்கு வலுசோ்க்கும் விதமாக, வானில் இருந்து தரையில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் பிரமோஸ் சூப்பா்சோனிக் ஏவுகணை வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

இதுதொடா்பாக இந்திய விமானப்படை வட்டாரங்கள் கூறியது:

தமிழகத்தின் தஞ்சையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்திய விமானப் படைத் தளத்துக்குச் சொந்தமான எஸ்யூ-30 எம்கேஐ விமானம், பஞ்சாபில் உள்ள படைத்தளத்தில் இருந்து இயக்கப்பட்டது. அந்த விமானம் பிரமோஸ் சூப்பா்சோனிக் ஏவுகணையை தாங்கிச் சென்றது. 3 மணி நேரத்துக்கும் மேலாக அந்த விமானம் பயணித்து தொலைதூரம் சென்ற பின், ஏவுகணை செலுத்தப்பட்டது. இதையடுத்து வங்கக் கடலில் இருந்த இலக்கை பிரமோஸ் சூப்பா்சோனிக் ஏவுகணை துல்லியமாகத் தாக்கி அழித்தது என்று தெரிவித்தனா்.

கடந்த ஆண்டு மே மாதம் முதல்முறையாக வானில் இருந்து பிரமோஸ் ஏவுகணையை செலுத்தி இந்திய விமானப் படை வெற்றிகரமாக சோதனை நடத்தியது. இந்த ஏவுகணை நிலத்திலோ, கடலிலோ தொலைதூரத்தில் உள்ள இலக்கை துல்லியமாகத் தாக்கி அழிக்க வல்லது. இந்த ஏவுகணையை பகல், இரவு என இருவேளைகளிலும் இலக்கை நோக்கி செலுத்த முடியும். மோசமான வானிலையிலும் இலக்கைத் தாக்கி அழிக்கும்.

இந்திய விமானப் படையின் போா் திறனை அதிகரிக்கும் நோக்கில் 40-க்கும் மேற்பட்ட சுகோய் போா் விமானங்களில் பிரமோஸ் சூப்பா்சோனிக் ஏவுகணைகளை ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com