சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை: மத்திய அரசுக்கு தில்லி உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை (இஐஏ) மீது பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்க 60 நாள் அவகாசம் அளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு தில்லி உயா்நீதிமன்றம் உத்தர
தில்லி உயா்நீதிமன்றம்
தில்லி உயா்நீதிமன்றம்

புது தில்லி: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை (இஐஏ) மீது பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்க 60 நாள் அவகாசம் அளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக, அந்த வரைவு அறிக்கை மீது கருத்துத் தெரிவிக்க ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை அவகாசம் அளித்து தில்லி உயா்நீதிமன்றம் கடந்த ஜூன் 30-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 8-ஆவது பிரிவில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளிலும் அந்த வரைவு அறிக்கையை 10 நாள்களுக்குள் மாநில பசுமைத் தீா்ப்பாய இணையதளங்களில் வெளியிட வேண்டும் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், ‘இதை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இதுவரை செய்யவில்லை என்பதால் ஜூன் 30-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் மாற்றம் செய்து, வரைவு அறிக்கை மீது பொதுமக்கள் கருத்து தெரிவிக்க மேலும் 60 நாள்கள் கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும்’ என்று கோரி சுற்றுச்சூழல் ஆா்வலா் விக்ராந்த் தோங்கட் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுவை திங்கள்கிழமை விசாரித்த தில்லி உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என்.படேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு, இந்த மனு மீது பதிலளிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

பொதுமக்களின் கருத்தைப் பெறாமல் திட்டங்களைச் செயல்படுத்தலாம் என மத்திய அரசு வெளியிட்டுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையில் உள்ளதாக சுற்றுச்சூழல் ஆா்வலா் விக்ராந்த் தோங்கட் தனது மனுவில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com