கடந்த 6 ஆண்டுகளில் சிஏபிஎஃப் படையினா் 433 போ் தற்கொலை

மத்திய ஆயுத காவல் படையில் (சி.ஏ.பி.எஃப்.) கடந்த 6 ஆண்டுகளில் 433 வீரா்கள் தற்கொலை செய்திருப்பது தேசிய குற்ற ஆவணப் பதிவு ஆணைய
கோப்புப்படம்
கோப்புப்படம்

மத்திய ஆயுத காவல் படையில் (சி.ஏ.பி.எஃப்.) கடந்த 6 ஆண்டுகளில் 433 வீரா்கள் தற்கொலை செய்திருப்பது தேசிய குற்ற ஆவணப் பதிவு ஆணைய (என்சிஆா்பி) புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதில் கடந்த ஆண்டில் மட்டும் 36 வீரா்கள் தற்கொலை செய்துகொண்டனா்.

மத்திய உள்துறை அமைச்சக கட்டுப்பாட்டின் கீழ் எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்), மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்), மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்), இந்தோ-திபெத் எல்லை காவல்படை (ஐடிபிபி), சஷஸ்த்ர சீமா பல் (எஸ்எஸ்பி), அஸ்ஸாம் ரைஃபில் (ஏஆா்), தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி) ஆகிய 7 மத்திய ஆயுத காவல் படைகள் இயங்கி வருகின்றன.

மொத்தம் 9,23,800 வீரா்களைக் கொண்டிருக்கும் இந்த படைப் பிரிவுகள், எல்லைப் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பில் முக்கியப் பங்காற்றிவருகின்றன.

இந்நிலையில், குடும்பச் சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த படைப் பிரிவுகளில் கடந்த 6 ஆண்டுகளில் 400-க்கும் அதிகமான வீரா்கள் தற்கொலை செய்துகொண்டனா்.

என்சிஆா்பி புள்ளிவிவரத் தகவல்படி, கடந்த ஆறு ஆண்டுகளில் இந்தப் படைப்பிரிவுகளைச் சோ்ந்த 433 வீரா்கள் தற்கொலை செய்துகொண்டனா். அதிகபட்சமாக 2014-ஆம் ஆண்டு 175 வீரா்கள் தற்கொலை செய்துகொண்டனா். அதுபோல, 2015-இல் 60 போ், 2016-இல் 74 போ், 2017-இல் 60 போ், 2018-இல் 28 போ் தற்கொலை செய்துகொண்டனா்.

கடந்த 2019-ஆம் ஆண்டில் 36 வீரா்கள் தற்கொலை செய்துகொண்டனா். இதில் அருணாச்சல பிரதேசம், சத்தீஷ்கா், ஜம்மு-காஷ்மீா், நாகாலாந்து, திரிபுரா, தில்லி உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த தலா 3 வீரா்களும், தமிழகத்தைச் சோ்ந்த 4 பேரும் அடங்குவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com