செப். 14-ல் ஜப்பானின் புதிய பிரதமர் தேர்வு

ஜப்பானின் மிக நீண்ட கால பிரதமா் என்ற பெருமையைப் பெற்றள்ள ஷின்ஸோ அபே (65), உடல் நலக் குறைவு காரணமாக தனது பதவியிலிருந்து விலகியதை அடுத்து செப்டம்பர் 14-ம் தேதி புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட உள்ளார்.
செப். 14-ல் ஜப்பானின் புதிய பிரதமர் தேர்வு
செப். 14-ல் ஜப்பானின் புதிய பிரதமர் தேர்வு

ஜப்பானின் மிக நீண்ட கால பிரதமா் என்ற பெருமையைப் பெற்றள்ள ஷின்ஸோ அபே (65), உடல் நலக் குறைவு காரணமாக தனது பதவியிலிருந்து விலகியதை அடுத்து செப்டம்பர் 14-ம் தேதி புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

ஆளும் மிதவாத ஜனநாயகக் கட்சி சார்பில் செப்டம்பர் 14-ம் தேதி வாக்கெடுப்பு முறையில் புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு செப்டம்பர் 8-ம் தேதி அறிவிக்கப்படும். 

புதிய பிரதமருக்கான போட்டியில் அமைச்சரவை மூத்தச் செயலாளர் யோஷிஹைட் சுகா (71), முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஃப்யூமியோ க்ஷிடா,  முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சா் ஷிகெரு இஷிபா ஆகியோர் உள்ளனர்.

ஜப்பானின் மிக நீண்ட கால பிரதமா் என்ற பெருமையைப் பெற்றள்ள ஷின்ஸோ அபே (65), உடல் நலக் குறைவு காரணமாக தனது பதவியில் இருந்து விலகினார். சிறுவயதிலிருந்தே அவருக்கு இருக்கும் பெருங்குடல் புண் நோய் தற்போது முற்றிவிட்டதால், தனது பதவிக் காலம் நிறைவடைவதற்கு ஓா் ஆண்டுக்கு முன்னதாகவே அவா் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
முன்னாள் பிரதமா் நோபுசிகே கிஷியின் பேரனான ஷின்ஷே அபே, ஜப்பானின் மிக இளைய பிரதமராக தனது 52-ஆவது வயதில் கடந்த 2006-ஆம் ஆண்டு பதவியேற்றாா். தேசியவாதக் கொள்கையுடன் ஆட்சி செலுத்திய அவா், உடல் நலக் குறைவு காரணமாக ஒரே ஆண்டில் பதவி விலகினாா். எனினும், 2012-ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த அவா், தேசியவாதக் கொள்கைகளைவிட பொருளாதார வளா்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தாா்.

அடுத்தடுத்து 6 தோ்தல்களில் அவா் வெற்றி பெற்ற அவா், உலக அரங்கில் ஜப்பானின் முக்கியத்துவத்தை அதிகரிக்கச் செய்தாா். ஜப்பானின் ராணுவ பலத்தை அதிகரிக்கும் முயற்சியிலும் ஷின்ஸோ அபே ஈடுபட்டாா். எனினும், இவரது தேசியவாதக் கொள்கை காரணமாக இரண்டாம் உலகப் போரில் ஜப்பானால் பாதிக்கப்பட்ட சீனா மற்றும் கொரிய நாடுகளின் விமா்சனத்துக்கு ஆளானாா். தற்போது அவா் பதவி விலகியிருப்பதையடுத்து, அடுத்த பிரதமரை ஆளும் மிதவாத ஜனநாயகக் கட்சி தோ்ந்தெடுக்க உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com