ராஜஸ்தான் மாநில எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்கு கரோனா தொற்று

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ராஜேந்திர ரத்தோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
ராஜேந்திர ரத்தோர்
ராஜேந்திர ரத்தோர்

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ராஜேந்திர ரத்தோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலரும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். 

இதன் தொடர்ச்சியாக ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், பாஜகவைச் சேர்ந்தவருமான ராஜேந்திர ரத்தோர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார். 

இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், 'இன்றைய கரோனா பரிசோதனையில் எனக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை 4-5 முறை கரோனா பரிசோதனை செய்துள்ளேன். சட்டப்பேரவை அமர்வின்போது கூட செய்யப்பட்ட கரோனா பரிசோதனையில் 'நெகடிவ்' என்றே வந்தது. 

இன்று தொற்று இருப்பது உறுதியானதால் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com