குஜராத்தில் காய்கறி விலை கடும் உயர்வு

கரோனா எதிரொலியாக விளைச்சல் குறைந்ததால் குஜராத் மாநிலத்தில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பல்வேறு வர்த்தக பரிவர்த்தனைகளில் தடை ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் விவசாய பொருட்களின் பரிவர்த்தனைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கில் போக்குவரத்து முடங்கியதால் விளைபொருட்களை கொண்டுசெல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் ஒரு பகுதியாக ஒருசில இடங்களில் குறுகிய காலப் பயிர்கள் பயிரிடப்படாமல் இருந்தது.

இதன் எதிரொலியாக தற்போது குஜராத்தில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் உள்ள சந்தையில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது வழக்கமான விலையை விட இரு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பேசிய பொதுமக்கள், ரூ.500 எடுத்துக்கொண்டு காய்கறி கடைக்குச் சென்றால், 4 முதல் 5 வகையான காய்கறிகள் மட்டுமே வீட்டிற்கு வாங்கிவர இயலுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com