பிரதமர் மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு முடக்கம்!

பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். இதனை ட்விட்டர் உறுதிப்படுத்தியுள்ளது. 
பிரதமர் மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு முடக்கம்!


புதுதில்லி: பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட  வலைத்தளத்தின் ட்விட்டர் கணக்கை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். இதனை ட்விட்டர் உறுதிப்படுத்தியுள்ளது. 

கடந்த ஜூலை மாதம், அமெரிக்க அதிபரின் நம்பிக்கைக்குரிய ஜோ பிடன், டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலன் மஸ்க், மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட பல பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் ஒரே நேரத்தில் கணினி வழி பண பரிவர்த்தனை (பிட்காயின்) மோசடி கும்பலால் ஹேக் செய்யப்பட்டன.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட வலைத்தளத்தின் narendramodi_in என்ற ட்விட்டர் கணக்கை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். முடக்கப்பட்டுள்ள ட்விட்டர் கணக்கை 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகின்றனர்

கணக்கை முடக்கியுள்ள ஹேக்கர்கள், பிரதமரின் கரோனாவுக்கான தேசிய நிவாரண நிதி திட்டத்திற்கு பிட்காயின் மூலம் பணம் அனுப்புமாறு தெரிவித்துள்ளனர். இதனை உறுதிப்படுத்தியுள்ள ட்விட்டர் நிறுவனம், "இந்த செயல்பாட்டை நாங்கள் அறிந்திருக்கிறோம், வெரிஃபைடு பக்கங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், நிலைமையை நாங்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம். கூடுதல் கணக்குகள் பாதிக்கப்படுவது குறித்து எங்களுக்குத் தெரியாது" என்று ட்விட்டரின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். 

இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில் ஜான் விக் என்பர் ஹேக் செய்துள்ளார். நாங்கள் Paytm Mall ஐ ஹேக் செய்யவில்லை" என்று ஹேக்கர்கள் கூறியுள்ளனர். அந்த ட்விட் பின்னர் நீக்கப்பட்டது. 

இருப்பினும், இந்த சம்பவம் குறித்து பிரதமர் அலுவலகம் அல்லது பிரதமர் மோடியின் தனிப்பட்ட கணக்கை நிர்வகிப்பவர்கள் யாரும் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

ஆகஸ்ட் மாதம் மத்திய அமைச்சர் ஜி கிஷன் ரெட்டியின் தனிப்பட்ட வலைத்தளம் சுய உரிமை கோரும் பாகிஸ்தான் ஹேக்கர்களால் குறிவைக்கப்பட்டு ஹேக் செய்யப்பட்டது.  சுதந்திர தினத்தன்று அவரது தனிப்பட்ட வலைத்தளம் ஹேக் செய்யப்பட்டது மற்றும் ஹேக்கர்கள் பாகிஸ்தானின் காஷ்மீர் தொடர்பான செய்திகளை வெளியிட்டனர், மேலும் இந்திய அரசையும் எச்சரித்தனர். இந்த சம்பவத்தை ஹைதராபாத்தில் உள்ள ஜி கிஷன் ரெட்டியின் அலுவலகம் பின்னர் உறுதிப்படுத்தியுள்ளது. 

அதனைத் தொடர்ந்து தற்போது பிரதமர் மோடியின் தனிப்பட்ட வலைத்தளத்தின் ட்விட்டர் கணக்கை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com