கர்நாடக கடலோர மாவட்டங்களில் அடுத்த 4 நாள்களுக்கு மழை

கர்நாடக கடலோர மாவட்டங்களில் அடுத்த 4 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கர்நாடக கடலோர மாவட்டங்களில் அடுத்த 4 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு
கர்நாடக கடலோர மாவட்டங்களில் அடுத்த 4 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

கர்நாடக கடலோர மாவட்டங்களில் அடுத்த 4 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மலைநாடு பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் கடந்த சில நாள்காளாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் நிரம்பியுள்ள அணைகள் திறக்கப்பட்டுள்ளதால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே கர்நாடக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, கர்நாடக கடலோர பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் செப்டம்பர் 8-ஆம் தேதி வரை தொடர் மழைக்கு வாய்ப்புள்ளது.

மலைநாடு பகுதியில் கனமழை பெய்யக்கூடும் என்பதால், ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பெங்களூரு பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று உத்தராகண்ட், கிழக்கு ராஜஸ்தான், அருணாசலப் பிரதேசம், மேகாலயா, அசாம், சிக்கிம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com