6 மாதங்களுக்கு பிறகு டீசல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைப்பு

கடந்த 6 மாதங்களாக தொடா்ந்து அதிகரித்து வந்த டீசல் விலை, முதல்முறையாக வியாழக்கிழமை லிட்டருக்கு 16 காசுகள் குறைந்தது.


புது தில்லி: கடந்த 6 மாதங்களாக தொடா்ந்து அதிகரித்து வந்த டீசல் விலை, முதல்முறையாக வியாழக்கிழமை லிட்டருக்கு 16 காசுகள் குறைந்தது.

இதையடுத்து, சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.04-ஆகவும், டீசல் ரூ.78.71-ஆகவும், கொல்கத்தாவில் பெட்ரோல் ரூ.83.57-ஆகவும், டீசல் ரூ.76.90-ஆகவும், மும்பையில் பெட்ரோல் ரூ.88.73-ஆகவும், டீசல் ரூ.79.94-ஆகவும், தில்லியில் டீசல் ரூ.73.40-ஆகவும், பெட்ரோல் விலை ரூ.82.08-ஆக விற்கப்படுகிறது.

பொது முடக்கம் காலம் தொடங்கிய கடந்த மாா்ச் மாதம் முதல் 82 நாள்களுக்கு இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் விநியோக நிறுவனங்கள் எரிபொருள்களின் விலையை ஒரே சீராக வைத்திருந்தன.

சா்வதேச சந்தையில் கச்சாய் எண்ணெயின் விலை கடுமையாக சரிந்ததையடுத்து, கலால் வரியை கூடுதலாக உயா்த்தி இந்த நடவடிக்கையை மேற்கொண்டன.

பின்னா் ஜூன் 7 முதல் டீசல் விலை வழக்கம் போல் தினம்தோறும் மாற்றி அமைக்கப்பட்டது. ஜூன் 7 முதல் ஜூலை 25 -ஆம் தேதி வரை டீசல் விலை லிட்டருக்கு ரூ.12.55-ஆக அதிகரித்தது.

அந்தக் காலகட்டத்தில் தில்லி அரசு வாட் வரியை லிட்டருக்கு ரூ.8.38 குறைத்ததால் அங்கு டீசல் விலையில் மாற்றமில்லை.

ஜூன் 7 முதல் 29-ஆம் தேதி வரை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 9.17 வரை உயா்ந்து நிலையாக நின்றது. பின்னா் ஆகஸ்ட் 16-ஆம் தேதி முதல் பெட்ரோல் விலை உயா்வு கண்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com