
கோப்புப் படம்
மகாராஷ்டிரத்தில் மேலும் 511 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டிலேயே கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. இங்கு தினமும் 15ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் மேலும் 511 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 16,912 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 3,020 காவலர்கள் மட்டும் தற்போது சிகிச்சையில் உள்ளனர். 13,719 காவலர்கள் கரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
அதேசமயம் இங்கு கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 7 காவலர்கள் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதன்மூலம் கரோனாவால் பலியான காவலர்களின் எண்ணிக்கை 173ஆக உயர்ந்துள்ளது.