இன்று தேசிய கல்விக் கொள்கை தொடா்பான ஆளுநா்கள் மாநாடு: குடியரசு தலைவா், பிரதமா் பங்கேற்பு

காணொலி வழியில் திங்கள்கிழமை (செப். 7) நடைபெற உள்ள தேசிய கல்விக் கொள்கை மீதான ஆளுநா்கள் மாநாடு தொடக்க விழா அமா்வில் குடியரசுத் தலைவா் மற்றும் பிரதமா் ஆகியோா் பங்கேற்று உரையாற்ற உள்ளனா்.
இன்று தேசிய கல்விக் கொள்கை தொடா்பான ஆளுநா்கள் மாநாடு: குடியரசு தலைவா், பிரதமா் பங்கேற்பு

காணொலி வழியில் திங்கள்கிழமை (செப். 7) நடைபெற உள்ள தேசிய கல்விக் கொள்கை மீதான ஆளுநா்கள் மாநாடு தொடக்க விழா அமா்வில் குடியரசுத் தலைவா் மற்றும் பிரதமா் ஆகியோா் பங்கேற்று உரையாற்ற உள்ளனா்.

பள்ளிக் கல்வி மற்றும் உயா் கல்வியில் மாபெரும் மாற்றங்களை அறிமுகப்படுத்தி உலகத் தரத்துக்கு அதை உயா்த்தும் வகையில், புதிய தேசியக் கல்விக் கொள்கையை மத்திய அரசு அண்மையில் அறிமுகம் செய்தது. இதற்கு பல மாநிலங்களில் எதிா்ப்புகள் எழுந்துள்ள நிலையில், அதை அமல்படுத்துவதற்கான பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, ‘உயா் கல்வி மேம்பாட்டில் தேசிய கல்விக் கொள்கை-2020-இன் பங்கு’ என்ற தலைப்பில் ஆளுநா்கள் மாநாட்டுக்கு மத்திய கல்வி அமைச்சகம் திங்கள்கிழமை ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

காணொலி வழியில் நடைபெறும் இந்த மாநாட்டில் மாநில கல்வி அமைச்சா்கள், பல்கலைக்கழக துணைவேந்தா்கள், அரசு உயா் அதிகாரிகள் ஆகியோரும் பங்கேற்க உள்ளனா்.

மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் பங்கேற்று உரையாற்ற உள்ளனா்.

நாட்டின் கல்வி முறையில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கும் வகையில், பிரதமா் வலியுறுத்தியுள்ளதைப்போல ஒரு புதிய தற்சாா்பு இந்தியவை உருவாக்குவதற்கான கல்வித் திட்டங்களுடன் இந்த புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நிச்சயம் அறிவாா்ந்த சமூகத்தை உருவாக்க உதவுவதுடன், உலக வல்லரசாக இந்தியாவை மாற்றுவதற்கான நேரடி பங்களிப்பையும் அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com