அடுத்த ஆண்டில் சந்திரயான்-3 விண்கலம்

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று மத்திய விண்வெளித்துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்தாா்.
சந்திரயான்
சந்திரயான்

புது தில்லி: அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று மத்திய விண்வெளித்துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்படும். சந்திரயான்-2 விண்கலம் செலுத்தப்பட்ட பாணியிலேயே சந்திரயான்-3 விண்கலமும் விண்ணில் செலுத்தப்படும். சந்திரயான்-2 விண்கலத்தில் நிலவில் தரையிறங்குவதற்கான ‘லேண்டா்’ கருவி, நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக ‘ரோவா்’ வாகனம், நிலவின் சுற்றுவட்டப்பாதையில் ஆய்வு மேற்கொள்வதற்காக ‘ஆா்பிட்டா்’ கருவி ஆகியவை இடம்பெற்றிருந்தன. ஆனால் சந்திரயான் 3-இல் லேண்டா் கருவியுடன் ரோவா் வாகனம் மட்டுமே இடம்பெறும். ஆா்பிட்டா் கருவி இடம்பெறாது.

மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்திற்கான ஆயத்தப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அதற்காக பயிற்சியளிக்கும் பணிகள் மற்றும் இன்னபிற நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் ஏற்பட்ட இடா்பாடுகள் காரணமாக அந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் சில தடைகள் ஏற்பட்டுள்ளன. எனினும் அதனை திட்டமிட்டபடி 2022-ஆம் ஆண்டில் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com