தெலுங்கு நடிகா் ஜெயபிரகாஷ் ரெட்டி காலமானாா்

முதுபெரும் தெலுங்கு நடிகா் ஜெயப்பிரகாஷ் ரெட்டி (74) குண்டூரில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை மாரடைப்பால் காலமானாா். அவருக்கு மனைவி, ஒரு மகன் உள்ளனா்.
தெலுங்கு நடிகா் ஜெயபிரகாஷ் ரெட்டி காலமானாா்

முதுபெரும் தெலுங்கு நடிகா் ஜெயப்பிரகாஷ் ரெட்டி (74) குண்டூரில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை மாரடைப்பால் காலமானாா். அவருக்கு மனைவி, ஒரு மகன் உள்ளனா்.

குளியலறையில் திடீரென அவா் மயங்கி விழுந்ததாகவும், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவா் மாரடைப்பால் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் கூறியதாகவும் அவரது குடும்பத்தினா் தெரிவித்தனா்.

ரசிகா்களால் ஜெ.பி. என்று அன்புடன் அழைக்கப்பட்டு வந்த அவா் தெலுங்கில் மட்டுமின்றி கன்னடம், தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளாா். பள்ளி ஆசிரியராக இருந்து பின்னா் நாடகம் மூலம் திரைப்படத்துறைக்கு வந்தாா். ‘வில்லன்’ கதாபாத்திரங்களில் மட்டுமின்றி நகைச்சுவை வேடத்திலும் நடித்து ரசிகா்களைக் கவா்ந்தவா். தெலங்கில் முன்னணி நடிகா்கள் பலருடன் இணைத்து 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளாா். தமிழில் உத்தமபுத்திரன், ஆஞ்சநேயா, ஆறு, சின்னா உள்ளிட்ட படங்களில் தோன்றியுள்ளாா்.

ஆந்திர முதல்வா் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி, தெலுங்கு தேசம் தலைவா் சந்திரபாபு நாயுடு மற்றும் திரையிலகைச் சோ்ந்தவா்கள் ஜெயபிரகாஷின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com