கரோனா இறப்புகளைக் குறைக்க பிளாஸ்மா சிகிச்சை உதவவில்லை: ஐசிஎம்ஆர் 

கரோனா இறப்புகளைக் குறைக்க பிளாஸ்மான சிகிச்சை உதவவில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒரு ஆய்வில் தெரிவித்துள்ளது. 
கரோனா இறப்புகளைக் குறைக்க பிளாஸ்மா சிகிச்சை உதவவில்லை: ஐசிஎம்ஆர் 


புதுதில்லி: கரோனா இறப்புகளைக் குறைக்க பிளாஸ்மான சிகிச்சை உதவவில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒரு ஆய்வில் தெரிவித்துள்ளது. 

இந்தியா முழுவதும் 39 மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சையின் செயல்திறனை ஆராய்ந்து அதன் முடிவுகளை ஐசிஎம்ஆர் தற்போது வெளியிட்டுள்ளது.

கரோனா தொற்று சிகிச்சைக்காக ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆண்டு ஏப்ரல் 22 முதல் ஜூலை 14 வரை நாடு முழுவதும் உள்ள 39 பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சீரற்ற கட்டுப்பாட்டு சோதனை தளங்களில் அனுமதிக்கப்பட்ட 1,210 நோயாளிகள் கண்காணிக்கப்பட்டனர். இதற்காக, 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 25 நகரங்களை சேர்ந்த 29 பேர் பொது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மற்றும் மிதமான நோய்வாய்ப்பட்ட 464 பேர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

"சுறுசுறுப்பான பிளாஸ்மா சிகிச்சை இறப்பு குறைப்பு அல்லது கடுமையான தொற்று பாதிப்பில் முன்னேற்றம் ஆகியவற்றுடன் தொடர்புப்படுத்தப்படவில்லை" என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்த சோதனை அதிக பொதுவான தன்மையைக் கொண்டுள்ளது மற்றும் வரையறுக்கப்பட்ட ஆய்வக திறன் கொண்ட அமைப்புகளில் சுறுசுறுப்பான பிளாஸ்மா சிகிச்சையின் நிஜ வாழ்க்கை அமைப்பை தோராயமாக மதிப்பிடுகிறது என்று ஆய்வின் முடிவுகள் வந்துள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

ஆய்வு சோதனைக்கு பயன்படுத்தப்பட்ட தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 464 மிதமான அளவில் பாதிக்கப்பட்ட நோயாளிகள், அவர்களில் 235 பேருக்கு தரமான பிளாஸ்மாவும், தரமான பராமரிப்பும் வழங்கப்பட்டன, இதில், 229 பேர் தரமான பராமரிப்பை பெற்றுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com