ஏழைகள் மீதான தாக்குதலே பொது முடக்கம்: ராகுல் காந்தி

​பொது முடக்கம் கரோனாவுக்கான தாக்குதல் அல்ல, அது ஏழைகள் மீதான தாக்குதல் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
​பொது முடக்கம் கரோனாவுக்கான தாக்குதல் அல்ல, அது ஏழைகள் மீதான தாக்குதல் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். (கோப்புப்படம்)
​பொது முடக்கம் கரோனாவுக்கான தாக்குதல் அல்ல, அது ஏழைகள் மீதான தாக்குதல் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். (கோப்புப்படம்)


பொது முடக்கம் கரோனாவுக்கான தாக்குதல் அல்ல, அது ஏழைகள் மீதான தாக்குதல் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

சுட்டுரைப் பக்கத்தில் விடியோ பதிவொன்றை ராகுல் காந்தி பதிவேற்றம் செய்துள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:

"பொது முடக்கம் கரோனா மீதான தாக்குதல் அல்ல. ஏழைகள் மீதான தாக்குதல். இளைஞர்களின் எதிர்காலம் மீதான தாக்குதல். தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகள் மீதான தாக்குதல். அமைப்புசாரா பிரிவுக்கு எதிரான தாக்குதல். இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தத் தாக்குதலுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும். கரோனா பெயரில் செய்த அனைத்தும் அமைப்புசாரா பிரிவு மீது நடத்தப்பட்ட 3-வது தாக்குதல். 

இது 21 நாள் போராட்டம் என பிரதமர் குறிப்பிட்டார். ஆனால், 21 நாள்களில் அமைப்புசாரா பிரிவுகளின் முதுகெலும்பை உடைத்துவிட்டீர்கள். பொது முடக்கத்துக்குப் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பும் தருணத்தில், ஏழைகளுக்கு உதவுவது அத்தியாவசியம் என அரசிடம் காங்கிரஸ் பலமுறை எடுத்துக்கூறியது. அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக பணத்தைச் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யவில்லை. மாறாக, 15-20 பணக்காரர்களின் லட்சக்கணக்கான கோடிகளை அரசு தள்ளுபடி செய்தது.

"ஏழைகள், சிறு மற்றும் நடுத்தர தொழில்களில் பணிபுரிபவர்கள், தினக்கூலிகள் ஆகியோர் அன்றாடம் சம்பாதிப்பதை வைத்து பிழைத்து வந்தனர். முன்னறிவிப்பின்றி பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது, இவர்கள் மீது நடத்திய தாக்குதல்" என்றார் ராகுல் காந்தி.

இந்த விடியோவுடன்,

"திடீர் பொது முடக்க அறிவிப்பு, அமைப்புசாரா வகுப்பினருக்கான மரண அடி. 21 நாள்களில் கரோனாவை ஒழித்துக்கட்டுவதாக வாக்குறுதியளிக்கப்பட்டது. ஆனால், அதற்குப் பதிலாக சிறு நிறுவனங்கள் மற்றும் கோடிக்கணக்கான வேலைகள் ஒழித்துக்கட்டப்பட்டுள்ளது. மோடியின் மக்கள் விரோத பேரழிவுத் திட்டங்களைக் குறித்து அறிய இந்த விடியோவைப் பார்க்கவும்" என்றும் அவர் ஹிந்தி மொழியில் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com