ரூ.3.71 கோடி மின்சாரக் கட்டணம்: அதிர்ச்சியடைந்த ராஜஸ்தான் விவசாயி

ராஜஸ்தான் மாநிலத்தில் விவசாயி ஒருவருக்கு மின்கட்டணமாக ரூ.3.71 கோடிக்கான பில்லை மாநில மின்சாரத்துறை அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ராஜஸ்தான் மாநிலத்தில் விவசாயி ஒருவருக்கு மின்கட்டணமாக ரூ.3.71 கோடிக்கான பில்லை மாநில மின்சாரத்துறை அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பெமராம் மனதங்கி. இவர் தான் வசிக்கும் கிங்லா கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக மின்சாரத்தைப் பயன்படுத்தியதற்காக மாநில மின்துறை ரூ.3 கோடியே 71 லட்சத்து 61 ஆயிரத்து 507 தொகையை மின்கட்டணமாக உடனடியாக செலுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் உடனடியாக மின்சாரக்கட்டணத்தைச் செலுத்தத் தவறினால் ரூ.7.16 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான பெமராம் அருகில் தான் கரோனா ஊரடங்கு காலத்தில் விவசாய வேலைகள் எதையும் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்தார்.

பெமராமின் இந்த மின்சாரக் கட்டண விவகாரம் சமூக ஊடங்களில் வெளியாகி மிகுந்த விமர்சனத்திற்குள்ளானது.

இதனைத் தொடர்ந்து, “தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தவறுதலாக மின்சாரக் கட்டணம் அச்சிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பெமராமிற்கான புதிய மின்சாரக் கட்டணமான ரூ.6000 அனுப்பப்பட்டு அவரும் அதனைக் செலுத்திவிட்டார்.” என ராஜஸ்தான் மாநில மின்சார வாரியம் விளக்கமளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com