
கோப்புப் படம்
மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 23,446 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று தினமும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிர மாநிலம் கரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில் மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 23 ஆயிரத்து 446 பேர் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 90 ஆயிரத்து 795 ஆக அதிகரித்து உள்ளது. இதே போல மாநிலத்தில் ஒரே நாளில் 448 பேர் நோய் தொற்றுக்கு பலியானார்கள். கரோனா தொற்றால் மாநிலத்தில் இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 28 ஆயிரத்து 282 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் ஒரே நாளில் 14 ஆயிரத்து 253 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 715 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி மாநிலத்தில் 2,61,432 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.