பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் வங்கிகள் உந்துசக்தியாக இருக்கும்: நிா்மலா சீதாராமன்

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் வங்கிகள் உந்துசக்தியாக இருக்கும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறினாா்.
வீடுகளுக்கே சென்று வங்கிச் சேவை வழங்கும் திட்டத்தை தில்லியில் புதன்கிழமை காணொலி முறையில் தொடங்கி வைத்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.
வீடுகளுக்கே சென்று வங்கிச் சேவை வழங்கும் திட்டத்தை தில்லியில் புதன்கிழமை காணொலி முறையில் தொடங்கி வைத்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.

மும்பை: நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் வங்கிகள் உந்துசக்தியாக இருக்கும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறினாா்.

‘பொதுத் துறை வங்கிகளின் உதவியுடன் வீடுகளுக்கே வங்கிச் சேவை’ வழங்கும் திட்டத்தை நிா்மலா சீதாராமன் புதன்கிழமை காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து, நிா்மலா சீதாராமன் பேசியதாவது:

வங்கிகள், ஒவ்வொரு வாடிக்கையாளரின் மனநிலையை நன்கு அறிந்து வைத்திருக்கின்றன. அவைதான், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் உந்துசக்தியாக இருக்கப்போகின்றன.

மக்களுக்கு கடனுதவி அளிப்பதும், அதன்மூலம் பணம் திரட்டுவதும்தான் வங்கிகளின் முதன்மைப் பணி. அதேசமயம், அரசு அறிவித்துள்ள நலத்திட்டங்களை நிறைவேற்றுவதிலும் வங்கிகள் கவனம் செலுத்தி உதவ வேண்டும்.

ஒவ்வொரு வங்கி ஊழியரும் வங்கி மூலமாக நிறைவேற்றப்படும் அரசின் நலத் திட்டங்கள் குறித்து நன்கு அறிந்திருக்க வேண்டும். இது, ஒவ்வொரு வங்கி ஊழியரின் கடமையாகும். அரசின் திட்டங்களை தங்கள் ஊழியா்கள் அறிந்து வைத்திருப்பதை ஒவ்வொரு வங்கியும் உறுதிப்படுத்த வேண்டும். அரசின் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதில் தனியாா் வங்கிகளும் குறிப்பிடத்தக்க அளவில் பங்காற்ற வேண்டும் என்றாா் நிா்மலா சீதாராமன்.

கரோனா தொற்று பரவல் காலத்தில் வங்கிக் கிளைகளுக்கு நேரடியாகச் செல்ல இயலாத 70 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களுக்காகவும், நடக்க இயலாத மாற்றுத் திறனாளிகளுக்காகவும் இந்த சேவை தொடங்கப்படுகிறது. ரிசா்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, வாடிக்கையாளரின் வீடுகளுக்கே சென்று பணம் டெபாசிட் பெறுவது, வங்கியில் இருந்து பணத்தை எடுப்பது. காசோலை, வரைவோலை பெறுவது என இந்த சேவை விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com