கரோனா பொதுமுடக்கத்தால் சீரடி கோவிலின் வருவாய் பாதிப்பு

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் சீரடி சாய்பாபா  கோவிலின் வருவாய் பாதிப்படைந்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் சீரடி சாய்பாபா  கோவிலின் வருவாய் பாதிப்படைந்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதல் கரோனா தொற்று பரவலால் நாட்டில் உள்ள மத வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டன. இதனால் வழிபாட்டுத் தலங்களுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை தடைபட்டது.

பக்தர்கள் வருகை குறைவால் மகாராஷ்டிர மாநிலத்தின் சீரடியில் உள்ள சாய்பாபா  கோவிலின் வருவாய் கடந்த ஆண்டின் மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலப்பகுதியைக் காட்டிலும் நடப்பாண்டில் ரூ.174 கோடி குறைந்துள்ளது.

“கடந்த 2019ஆம் ஆண்டின் மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலத்தில் சாய்பாபா கோவிலுக்கு ரூ.289.55 கோடி வருவாய் கிடைத்தது.கரோனா பொதுமுடக்கத்தால் நடப்பாண்டின் அதே காலப்பகுதியில் கோவிலின் வருவாய் ரூ.115.16 கோடியாகக் குறைந்துள்ளது.” என ஸ்ரீ சாய்பாபா சான்ஸ்தான் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி கன்ஹுராஜ் பாகேட் கூறினார்.

கடந்த ஆண்டு, இந்த கோவிலுக்கு 8.868 கிலோ தங்கம் மற்றும் 194 கிலோ வெள்ளி நகைகள் நன்கொடையாகக் கிடைத்தன. ஆனால் பொதுமுடக்கக் காலத்தில் 162 கிராம் தங்கம் மற்றும் 2.6 கிலோ வெள்ளி மட்டுமே பெறப்பட்டுள்ளது.

கோயிலின் நிர்வாக செலவுகளுக்கு ரூ.55 கோடியும், கோவிலின் 5,500 ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக ரூ.13 கோடியும் செலவு செய்யப்படுவதாக பாகேட் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com