பெங்களூரு: ஆம்புலன்ஸில் சென்ற பெண் 'கரோனா நோயாளி' மாயமானதில் திடீர் திருப்பம்

பெங்களூருவின் பொம்மனஹள்ளி பகுதியைச் சேர்ந்த 28 வயதான சங்கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கரோனா உறுதி செய்யப்பட்டு ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் மாயமாகியுள்ளார்.
பெங்களூரு: ஆம்புலன்ஸில் சென்ற பெண் 'கரோனா நோயாளி' மாயமானதில் திடீர் திருப்பம்
பெங்களூரு: ஆம்புலன்ஸில் சென்ற பெண் 'கரோனா நோயாளி' மாயமானதில் திடீர் திருப்பம்

பெங்களூரு: பெங்களூருவின் பொம்மனஹள்ளி பகுதியைச் சேர்ந்த 28 வயதான சங்கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கரோனா உறுதி செய்யப்பட்டு ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் மாயமாகியுள்ளார்.

இது குறித்து அவரது உறவினர் கூறுகையில், செப்டம்பர் 3-ம் தேதி முழு தற்பாதுகாப்பு உடையுடன் வீட்டுக்கு வந்த நான்கு பேர் எங்கள் வீட்டில் இருந்த அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்தனர். பக்கத்து வீட்டில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை நடத்தினர்.

அடுத்த நாளே, இரண்டு பேர் ஆம்புலன்ஸில் வந்து, சங்கீதாவுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதாகக் கூறி அவரை பிரஷாந்த் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாகக் கூறினர். கையில் செல்லிடப்பேசியைக் கொண்டு வரக் கூடாது என்று சொல்லிவிட்டனர். பிறகு எங்களை மருத்துவமனைக்கு வந்து பார்க்குமாறு கூறிவிட்டுச் சென்றனர்.

நாங்கள் மருத்துவமனைக்குச் சென்று சங்கீதா பற்றி கேட்ட போது, அப்படி ஒரு நோயாளியே அனுமதிக்கப்படவில்லை என்று கூறிவிட்டார்கள்.

பிறகுதான், நாங்கள் பெங்களூரு மாநகராட்சியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, விவரம் கேட்டபோது, எங்கள் பகுதியில் வீடு வீடாகச் சென்று பரிசோதனையே நடத்தப்படவில்லை என்றும், சங்கீதா என்ற பெயரில் எந்த நோயாளிக்கும் கரோனா உறுதி செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தனர். சங்கீதா மாயமாகி 4 நாள்கள் ஆகிவிட்டது.

அவரது கணவர் பொம்மனஹள்ளி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இந்த சம்பவத்தில் மாயமான பெண்ணுக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற வகையில் விசாரணை நடப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com