எம்.பி.க்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை: மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்கும் உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆர்டி-பிசிஆர் கருவி மூலம் கரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
எம்.பி.க்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை: மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா
எம்.பி.க்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை: மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா


புது தில்லி: நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்கும் உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆர்டி-பிசிஆர் கருவி மூலம் கரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத் தொடர் குறித்து பேசிய ஓம் பிர்லா, கரோனா பேரிடருக்கு மத்தியில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரை நடத்துவது என்பது மிகவும் சாவாலான விஷயமாக உள்ளது. எனினும், நமது அரசியலமைப்புக் கடமையை நிறைவேற்றுவோம்.

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கூட்டத் தொடர் நடத்தப்படும். நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகை, செல்லிடப்பேசி செயலி வாயிலாக  பதிவு செய்யப்படும். 

வரலாற்றில் முதன் முறையாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது கேள்விகளை ஆன்லைன் மூலம் அனுப்ப உள்ளனர். அவர்களது கேள்விகளுக்கு பதிலளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடா் வரும் 14-ஆம் தேதி முதல் அக்டோபா் மாதம் 1-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கூட்டத்தொடரை பாதுகாப்பாக நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com