
K'taka Veterinary health minister contracts COVID-19
கர்நாடக மாநிலத்தின் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பிரபு சௌகானுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பில்,
சுகாதார அமைச்சரின் ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், கடந்த வாரம் கால்நடை சுகாதார அமைச்சர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டார்.
பின்னர், கரோனா பரிசோதனை செய்ததில் அவருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.
அமைச்சருடன் தொடர்பிலிருந்த அவரது மருமகனுக்கும் கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.