கங்கனாவின் மும்பை அலுவலகம் இடிப்பு: ஆளுநர் அதிருப்தி

நடிகை கங்கானா ரணாவத்தின் அலுவலகக் கட்டடத்தை இடித்த மும்பை மாநகராட்சியின் செயலுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி
மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி

மும்பை: நடிகை கங்கனா ரணாவத்தின் அலுவலகக் கட்டடத்தை இடித்த மும்பை மாநகராட்சியின் செயலுக்கு மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் பாந்த்ரா அடுத்துள்ள பாலிஹில் பகுதியில் சட்டவிரோதமாக கட்டடத்தை கட்டியுள்ளதாகக் கூறி நடிகை கங்கனா ரணாவத்தின் அலுவலகத்தை மும்பை மாநகராட்சி இடித்தது.

இதனை எதிர்த்து நடிகை கங்கனா தரப்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், கட்டடத்தை இடிப்பதற்கு இடைக்காலத் தடைவிதிக்கப்பட்டது.

இதனிடையே கங்கனா ரணாவத்தின் கட்டடம் இடிக்கப்பட்ட நிகழ்விற்கு மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவின் சிறப்பு ஆலோசகரான அஜோய் மேத்தா உடன் பேசிய ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, மும்பை மாநகராட்சியின் நிகழ்விற்கு அதிருப்தி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com