நடிகை ரியா சக்ரவர்த்தியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டில் நீதிமன்றக் காவலில் உள்ள,  ஹிந்தி திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தோழியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்தியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு.. 
போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டில் நீதிமன்றக் காவலில் உள்ள,  ஹிந்தி திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தோழியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்தியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு..
போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டில் நீதிமன்றக் காவலில் உள்ள, ஹிந்தி திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தோழியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்தியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு..

மும்பை: போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டில் நீதிமன்றக் காவலில் உள்ள,  ஹிந்தி திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தோழியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்தியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.   

போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டில் ஹிந்தி திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தோழியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்தியை போதைப்பொருள் பொருள் தடுப்புப் பிரிவினர் (என்சிபி ) செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

 சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக ரியா சக்ரவர்த்தியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். அதேவேளையில் சுஷாந்த்தின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை சட்டவிரோதமாக கைமாற்றியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பணமோசடி வழக்குப்பதிவு செய்து அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே ரியாவுக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக அவரின் செல்லிடப்பேசி உரையாடல்கள் மூலம் தெரியவந்தது. இதுதொடர்பாக என்சிபி அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து அவரிடம் இரண்டு நாள்களாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மும்பையில் உள்ள என்சிபி அலுவலகத்தில் 3-ஆவது நாளாக செவ்வாயன்று அவர் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது அவரை அதிகாரிகள் கைது செய்தனர். அதன் பின்னர் அவர் மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட  பின்னர் என்சிபி அலுவலகத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் காணொலி வாயிலாக புதன்கிழமை ரியா ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், ரியாவின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவினை நீதிபதி தள்ளுபடி செய்ததுடன், ரியாவிற்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் அளித்து உத்தரவிட்டார். இதையடுத்து ரியா பைகுல்லா சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்நிலையில் மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சிறப்பு  நீதிபதி முன்னிலையில், அரசுத் தரப்பு சிறப்பு வழக்குரைஞர் அதுல் சர்பாண்டே மற்றும் என்சிபி விசாரணை அதிகாரி கிரண் பாபு இருக்கும் போது,     ரியாவின் வழக்கறிஞர் மனேஷிண்டே மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். தற்போது அந்த மனுவின் தீர்ப்பை வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com