கரோனாவால் பணிபுரியும் பெண்களுக்கு மன அழுத்தம் அதிகரிப்பு

நாட்டில் கரோனா பெருந்தொற்றால் பணிபுரியும் பெண்களில் 50 சதவிகிதத்தினருக்கு மன அழுத்தம் மற்றும் கவலை ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
கரோனாவால் பணிபுரியும் பெண்களுக்கு 50% மன அழுத்தம் அதிகரிப்பு
கரோனாவால் பணிபுரியும் பெண்களுக்கு 50% மன அழுத்தம் அதிகரிப்பு

நாட்டில் கரோனா பெருந்தொற்றால் பணிபுரியும் பெண்களில் 50 சதவிகிதத்தினருக்கு மன அழுத்தம் மற்றும் கவலை ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

கரோனா பெருந்தொற்று பரவி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒருசில தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், அனைத்துத்துறைகளும் அதிக அளவிலான இழப்புகளை சந்தித்துள்ளன.

இதனிடையே கரோனா பெருந்தொற்று காலத்தில் பணிபுரியும் பெண்களில் 50 சதவிகிதத்தினர் கடும் மன உளைச்சல் மற்றும் கவலைக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலிபோர்னியாவை தலைமையகமாக கொண்ட தனியார் நிறுவனம் இந்தியாவில் நடத்திய இந்த ஆய்வில் பணிபுரியும் பெண்களில் 47 சதவிகிதத்தினர் மன அழுத்தத்தை சந்திப்பதாக தெரியவந்துள்ளது. 

இதேபோன்று பெருந்தொற்று காலத்தில் 38 சதவிகித ஆண்கள் மன உளைச்சலை சந்தித்துள்ளனர். 

ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை 2,254 தொழில்துறை வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆய்வில் பணிபுரியும் தாய்மார்கள் மற்றும் பெண்களிடையே பெருந்தொற்று பெறும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பெருந்தொற்று காலத்தில் குழந்தைகளை காப்பதில் உள்ள சவால்களும் மன உளைச்சலுக்கு காரணமாக கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், பணிக்குச் செல்லும் பெண்களில் 3-ல் ஒரு பெண் வீட்டில் முழுநேரமாக குழந்தையை பராமரிக்கும் கடமையை மேற்கொள்கிறார். அதாவது 31% பெண்கள் குழந்தைகளை பராமரிக்கின்றனர்.  இந்த விகிதம் 5-ல் 1 ஆண் குழந்தையை பராமரிப்பதற்கு சமமாக உள்ளது.

குழந்தை பராமரிப்பிற்காக 5-ல் இரண்டுக்கும் அதிகமான (44%) பெண்கள் வெளியே வேலை செய்கின்றனர். இது பல ஆண்களில் இரண்டு பேருக்கு (25%) சமமாக உள்ளது.

மேலும் குழந்தை பராமரிப்பிற்காக 5-ல் ஒரு பெண் (20%) தங்களது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் தங்கியுள்ளார்.  


வேலை செய்யும் தாய்மார்களில் 46 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் தங்களது வேலை நேரத்தை ஈடுகட்ட அதிக நேரம் பணிபுரிகின்றனர். 42 சதவிகித தாய்மார்கள் குழந்தை பராமரிப்பிற்கு இடையே பணிபுரிய இயலாத சூழலை சந்திக்கின்றனர் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com