Enable Javscript for better performance
ரஃபேல் போர் விமானங்கள் இணைப்பு: சாரங் ஏரோபேட்டிக்ஸ் குழுவினரின் விமான சாகசம்- Dinamani

சுடச்சுட

    

    ரஃபேல் போர் விமானங்கள் இணைப்பு: சாரங் ஏரோபேட்டிக்ஸ் குழுவினரின் விமான சாகசம்

    By ANI  |   Published on : 10th September 2020 11:25 AM  |   அ+அ அ-   |    |  

    Rafale fighter aircraft flying at low-speed during an air display at Indian Air Force base in Ambala

    ரஃபேல் போர் விமானங்கள் இணைப்பு: சாரங் ஏரோபேட்டிக்ஸ் குழுவினரின் விமான சாகசம்

     

    பிரான்ஸிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 5 ரஃபேல் போா் விமானங்கள் இந்திய விமானப்படையில் இன்று அதிகாரப்பூா்வமாக இணைக்கப்பட்டன.

    இந்த இணைப்பு விழாவில், இந்திய விமானப் படையின் சாரங் ஏரோபேட்டிக்ஸ் குழுவினரின் விமான சாகச நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன.

    சாரங் ஏரோபேட்டிக்ஸ் குழுவினரின் கண்கவர் சாகச நிகழ்ச்சிகள் விருந்தினர்களை வெகுவாகக் கவர்ந்தது. நான்கு திசையில் இருந்து வந்த நான்கு விமானங்கள் ஒரே இடத்தில் இணைந்து பிறகு நான்கு திசைகளிலும் பிரிந்து செல்லும் சாகச நிகழ்ச்சியைப் பார்த்து விருந்தினர்கள் கைதட்டி ரசித்தனர்.

    ஹரியாணா மாநிலம் அம்பாலா விமானப் படை தளத்தில் நடைபெற்று வரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்நிகழ்வில், ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் பிளாரன்ஸ் பார்லி, இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்பட பல தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். விமானப் படையில் இணைக்கப்படும் ஐந்து ரஃபேல் போர் விமானங்களுக்கும் அனைத்து மத வழிபாட்டுடன் பூஜைகள் நடத்தப்பட்டன.

    பின்னர், இந்திய விமானப் படையில், ஐந்து ரஃபேல் போர் விமானங்களும் முறைப்படி இணைக்கப்பட்டன. நிகழ்ச்சியில், இந்திய விமானப் படை வீரர்கள் பல்வேறு விமான சாகசங்களை நிகழ்த்தி வருகிறார்கள்.

    முன்னதாக, 
    ரஃபேல் போா் விமானங்களை வாங்குவதற்கு பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் மத்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதில் முதல் தொகுதியாக 5 போா் விமானங்கள் கடந்த ஜூலை மாதம் 29-ஆம் தேதி இந்தியா வந்தடைந்தன.

    அந்த 5 ரஃபேல் போா் விமானங்களையும் இந்திய விமானப்படையில் அதிகாரப்பூா்வமாக இணைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. ஹரியாணாவின் அம்பாலா விமானப்படைத் தளத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சா் பிளாரன்ஸ் பாா்லி, முப்படைத் தளபதி விபின் ராவத், விமானப்படை தலைமைத் தளபதி ஆா்.கே.எஸ்.பதௌரியா, பாதுகாப்புத் துறை செயலா் அஜய் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றுள்ளனர்.

    மேலும், பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்தின் அதிகாரிகளும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிகழ்ச்சியின்போது ரஃபேல் போா் விமானங்கள் தேஜஸ் போா் விமானங்கள் உள்ளிட்டவை மூலமாக விமானப்படை வீரா்கள் சாகசங்களில் ஈடுபட்டுள்ளனர்.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp