சம்ஸ்கிருத கிராமம்: உத்தரகண்ட் அரசு புதிய முயற்சி

சம்ஸ்கிருதத்தை அன்றாட வாழ்விலும் பயன்படுத்தும் மொழியாக உருவாக்கும் முயற்சியாக "சம்ஸ்கிருத கிராமம்' என்ற திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்த உத்தரகண்ட் அரசு முடிவெடுத்துள்ளது. 


டேராடூன்: சம்ஸ்கிருதத்தை அன்றாட வாழ்விலும் பயன்படுத்தும் மொழியாக உருவாக்கும் முயற்சியாக "சம்ஸ்கிருத கிராமம்' என்ற திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்த உத்தரகண்ட் அரசு முடிவெடுத்துள்ளது. 
சம்ஸ்கிருத கிராமங்களில் மக்கள் தங்கள் பேச்சு வழக்கிலும் சம்ஸ்கிருத மொழியையே பயன்படுத்துவார்கள். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கிராமம் தேர்வு செய்யப்படும். அங்கு சம்ஸ்கிருத பள்ளியும் தொடங்கப்பட இருக்கிறது. 
முன்னதாக, இரு கிராமங்களில் இத்திட்டம் சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டது. அது வெற்றி பெற்றதையடுத்து மாநிலம் முழுவதும் அந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. ஹரித்துவாரைச் சேர்ந்த சம்ஸ்கிருத அகாதெமியுடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்துள்ளார். 
உத்தரகண்டில் அலுவல் மொழியான ஹிந்திக்கு அடுத்து கூடுதல் அலுவல் மொழியாக சம்ஸ்கிருதம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com