வேலைவாய்ப்புக்காக போராடும் இளைஞர்களுக்கு ஆதரவு: பிரியங்கா வதேரா

தங்களுடைய வேலைவாய்ப்பு உரிமைக்காக போராடும் இளைஞர்களுக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா வதேரா கேட்டுக் கொண்டுள்ளார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா வதேரா
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா வதேரா


புது தில்லி: தங்களுடைய வேலைவாய்ப்பு உரிமைக்காக போராடும் இளைஞர்களுக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா வதேரா கேட்டுக் கொண்டுள்ளார்.
 
பணியாளர்களை தேர்வு செய்வதை மத்திய அரசு நிறுத்திவிட்டது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். 

இதுதொடர்பாக ஹிந்தியில் அவர் புதன்கிழமை வெளியிட்ட சுட்டுரைப் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது: 
நாட்டில் வேலையின்மை அதிகரித்துவிட்டது. மத்திய அரசும் பணியாளர்களைத் தேர்வு செய்வதை நிறுத்திவிட்டு, அனைத்தையும் தனியார்மயமாக்கி வருகிறது. இந்த சூழ்நிலையில் நாட்டில் உள்ள இளைஞர்கள் வேலைவாய்ப்பு கோரி குரல் எழுப்பி வருகின்றனர். 

அவர்கள் தங்கள் குரலை வலுவாக எழுப்ப வேண்டும். வேலைவாய்ப்பு கோரும் இளைஞர்களின் போராட்டத்துக்கு நாம் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும். நாட்டின் பொருளாதாரத்தை -23.9 சதவீதம் அளவுக்கு மத்திய அரசு சரித்துவிட்டது. 

கரோனா தடுப்பு நடவடிக்கைகளை உரியமுறையில் மேற்கொள்ளாததுதான் இதற்கு முக்கியக் காரணம். இதனால், நாட்டில் வேலையின்மையும் அதிகரித்துவிட்டது. பொருள்களுக்கான தேவை, முதலீடு என அனைத்துமே சரிந்துவிட்டது என்று பிரியங்கா தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com