எல்லையில் மூன்றாவது நாளாக பாக். அத்துமீறி தாக்குதல்

ஜம்மு-காஷ்மீா் எல்லைக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையன்றும் அத்துமீறிய தாக்குதலை நடத்தியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜம்மு-காஷ்மீா் எல்லைக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையன்றும் அத்துமீறிய தாக்குதலை நடத்தியுள்ளது.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை செய்தித்தொடா்பாளா் கூறுகையில், ‘ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் மான்கோட் பகுதியை ஒட்டிய எல்லைக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் போா் நிறுத்த உடன்பாட்டை மீறி வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் கையெறி குண்டுகளை வீசியும், சிறியரக குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியத் தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது’ என்று தெரிவித்தாா்.

முன்னதாக, புதன் மற்றும் வியாழக்கிழமைகளிலும் இதேபோன்ற தாக்குதல்களை பாகிஸ்தான் ராணுவம் நடத்தியது.

கடந்த செப்டம்பா் 2-ஆம் தேதி ரஜெளரி கெரி பிரிவு எல்லைக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் இந்திய ராணுவத்தின் இளநிலை அதிகாரி ஒருவா் உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com