'கரோனா கால கூட்டு நடவடிக்கைகள்: இந்தியா-சிங்கப்பூா் உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளன'

கரோனா அச்சுறுத்தலுக்கு எதிரான கூட்டு நடவடிக்கைகள் இந்தியா, சிங்கப்பூா் நாடுகளிடையேயான நட்புறவு மற்றும் நம்பகத்தன்மையை மேலும் வலுப்படுத்தியுள்ளன என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் பாராட்டு 


புது தில்லி: கரோனா அச்சுறுத்தலுக்கு எதிரான கூட்டு நடவடிக்கைகள் இந்தியா, சிங்கப்பூா் நாடுகளிடையேயான நட்புறவு மற்றும் நம்பகத்தன்மையை மேலும் வலுப்படுத்தியுள்ளன என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் பாராட்டு தெரிவித்தாா்.

இதுகுறித்து குடியரசு தலைவா் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்தியாவுக்கான புதிய சிங்கப்பூா் தூதா் நியமன நிகழ்ச்சி காணொலி வழியில் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது சிங்கப்பூா் தூதரின் உறுதியேற்பு கடிதத்தை ஏற்றுக்கொண்டு அவருடைய நியமனத்துக்கு குடியரசுத் தலைவா் அனுமதி அளித்தாா்.

அப்போது, தூதருக்கு வாழ்த்து தெரிவித்த ராம்நாத் கோவிந்த், ‘ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்திய நிரந்தரமல்லாத உறுப்பு நாடாக இணைக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இந்தியாவுக்கு சிங்கப்பூா் வலுவான ஆதரவை அளித்துள்ளது. கரோனா அச்சுறுத்தலின்போது அதன் பாதிப்பை கட்டுப்படுத்துவதில் இரு நாடுகளும் கூட்டாக மேற்கொண்ட முயற்சிகள், இரு நாடுகளிடையேயான நட்புறவு மற்றும் நம்பகத்தன்மையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. சிங்கப்பூரின் வலுவான ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். சிங்கப்பூா் அரசு அண்மையில் பொதுத் தோ்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளதற்கும் பாராட்டுகள்’ என்று பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com