கரோனாவிலிருந்து குணமடைந்தவர்களில் 60% பேர் 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்

ஒரு நாளில் கரோனா தொற்று உறுதி செய்யப்படுவோரின் மொத்த எண்ணிக்கையில் 60 சதவீத நோயாளிகளைக் கொண்டிருக்கும் மகாராஷ்டிரம், தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களில் இருந்துதான் 60% நோயாளிகள் கரோனாவில் இருந்து
கரோனாவிலிருந்து குணமடைந்தவர்களில் 60% பேர் 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்
கரோனாவிலிருந்து குணமடைந்தவர்களில் 60% பேர் 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்

நாட்டில் ஒரு நாளில் கரோனா தொற்று உறுதி செய்யப்படுவோரின் மொத்த எண்ணிக்கையில் 57 சதவீத நோயாளிகளைக் கொண்டிருக்கும் மகாராஷ்டிரம், தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களில் இருந்துதான் 60% நோயாளிகள் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

நாட்டில் ஒட்டுமொத்தமாக கரோனாவில் இருந்து மீண்வர்களின் எண்ணிக்கை 35,42,663 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 70,880 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதில் மகாராஷ்டிரத்தில் மட்டும் 14 ஆயிரம் பேரும், ஆந்திரத்தில் 10 ஆயிரம் பேரும் அடங்குவர்.

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 96,551 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மகாராஷ்டிரத்தில் 23 ஆயிரம் பேருக்கும், ஆந்திரத்தில் 10 ஆயிரம் பேருக்கும் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

24 மணி நேரத்தில் நாட்டில் மாநில வாரியாக குணமடைந்தவர்களின் விழுக்காடு..
மகாராஷ்டிரம் - 20.1%
தமிழ்நாடு - 14.2%
ஆந்திரம் - 9.9%
கர்நாடகம் 8.7%
உத்தரப்பிரதேசம் 6.5% 
இதன் அடிப்படையில், நாட்டில் ஒரு நாள் பாதிப்பில் 57 சதவீத நோயாளிகளைக் கொண்டிருக்கும் இந்த 5 மாநிலங்களில் தான், 60 சதவீத கரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.

ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தற்போது 9,43,480 பேர் அதாவது 20.68 சதவீதம் பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில், மகாராஷ்டிரத்தில் மட்டும் 2.60 லட்சம் பேரும், கர்நாடகத்தில் 1 லட்சம் பேரும் சிகிச்சையில் உள்ளனர்.

நாட்டில் இன்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 1209 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். அதில் மகாராஷ்டிரத்தில் 495 பேரும், கர்நாடகத்தில் 129 பேரும், உ.பி.யில் 94 பேரும் அடங்குவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com