இந்தியா - ஜப்பான் இடையே ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம்

இந்தியா - ஜப்பான் இடையே ராணுவ ஒத்துழைப்பு தொடா்பான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.


புது தில்லி: இந்தியா - ஜப்பான் இடையே ராணுவ ஒத்துழைப்பு தொடா்பான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சக செய்தித்தொடா்பாளா் கூறியதாவது:

பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் சேவைகள் பரிமாற்றம் தொடா்பாக இந்தியா - ஜப்பான் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இரு நாடுகளிடையே புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த உடன்பாட்டில் பாதுகாப்புத் துறை செயலா் அஜய் குமாா், ஜப்பான் தூதா் சாடோஷி சுஸுகி ஆகியோா் கையெழுத்திட்டனா்.

இந்தியா - ஜப்பான் ஆயுதப் படைகளுக்கு இடையே பரஸ்பர ஒத்துழைப்பு, இருதரப்பு கூட்டு பயிற்சி நடவடிக்கைகள், ஆயுதங்கள் மற்றும் சேவைகள் பரிமாற்றம் ஆகியவற்றுக்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com