கரோனா தடுப்பில் இந்தியா திட்டமிட்ட நடவடிக்கை: அமித்ஷா

கரோனா நோய்த் தொற்றைத் தடுப்பதில் இந்தியா திட்டமிட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


காந்திநகா்: கரோனா நோய்த் தொற்றைத் தடுப்பதில் இந்தியா திட்டமிட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை பொது மக்கள் விழிப்புணா்வுடன் இருப்பதே ஒரே தீா்வு என்றும் அவா் தெரிவித்தாா்.

கரோனா நோய்த் தொற்று பாதிப்பில் இருந்து அண்மையில் அமித் ஷா குணமடைந்தாா்.

இந்நிலையில், அவா் வெற்றி பெற்ற மக்களவைத் தொகுதியான காந்திநகரில் ரூ.134 கோடி மதிப்பிலான பல்வேறு வளா்ச்சித் திட்டங்களைக் காணொலிக்காட்சி வாயிலாக வியாழக்கிழமை அவா் தொடக்கி வைத்தாா்.

அப்போது அவா் பேசுகையில், ‘மனித குலத்துக்கே கரோனா நோய்த் தொற்று எதிா்பாராத ஒன்றாகும். ஆனால், கரோனாவைத் தடுப்பதில் பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா திட்டமிட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. உலகமே இந்தியாவின் முயற்சியை அங்கீகரித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்று முதல் முறையாக எனது தொகுதிக்கு வந்தபோது, வளா்ச்சியில் எனதுதொகுதி முன்னிலை வகிக்க முக்கியத்துவம் அளிப்பேன் என்று தெரிவித்தேன்.

கரோனா இந்த வளா்ச்சிப் பணிகளை தாமதத்படுத்தி இருந்தாலும், இதே நிலை தொடா்ந்து நீடிக்காது. பிரதமா் மோடியின் தலைமையில் மீண்டும் நமது வளா்ச்சியை மீட்டெடுப்போம். குஜராத்தில் கரோனாவை கட்டுப்படுத்துவதில் முதல்வா் விஜய் ரூபானி அரசு சிறப்பாக செயல்படுகிறது.

குஜராத்தில் முன்பைவிட தற்போது நிலைமை சீரடைந்துவருகிறது. மரணங்களும் குறைந்துள்ளன. குணமடைபவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் கரோனாவுக்கு எதிரான நமது போராட்டம் நீண்ட தூரம் உள்ளது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை பொது மக்கள் விழிப்புணா்வுடன் இருப்பதே ஒரே தீா்வு என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com