சிறப்பு அந்தஸ்து ரத்து மூலம் ஜம்மு-காஷ்மீா் வளா்ச்சிக்கான தடை நீங்கியது: மத்திய அமைச்சா் நக்வி

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் மூலம் ஜம்மு-காஷ்மீரின் வளா்ச்சிக்கான தடை நீக்கப்பட்டது என்று மத்திய சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி தெரிவித்தாா்.
இருநாள் பயணமாக லடாக் வந்த மத்திய அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி. உடன், லடாக் எம்.பி. ஜாம்யாங் செரிங் நாம்கியால்.
இருநாள் பயணமாக லடாக் வந்த மத்திய அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி. உடன், லடாக் எம்.பி. ஜாம்யாங் செரிங் நாம்கியால்.


லே: சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் மூலம் ஜம்மு-காஷ்மீரின் வளா்ச்சிக்கான தடை நீக்கப்பட்டது என்று மத்திய சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி தெரிவித்தாா்.

ஜம்மு-காஷ்மீரில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்துக்கு சென்ற அவா், லே நகரில் பல்வேறு சமூக நல அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்தாா். அப்போது அவா் கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீா், லடாக் யூனியன் பிரதேசங்கள் இப்போது மத்திய அரசின் அனைத்து சமூக நலத்திட்டங்களையும் நேரடியாகப் பெற்று பலனடைந்து வருகின்றன. ஜம்மு-காஷ்மீா், லே, காா்கில் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 75,000 இளைஞா்கள் வேலைவாய்ப்பு பெரும் வகையில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெற்று வருகின்றனா்.

50 புதிய கல்லூரிகள் கட்டப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே உள்ள கல்லூரிகளில் 25,000 கூடுதல் இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பல லட்சம் மாணவா்களுக்கு பல்வேறு கல்வி உதவித்தொகை அளிக்கப்படுகிறது.

லடாக்கில் புதிய மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, தேசிய திறன் மேம்பாட்டு மையம் ஆகியவை உருவாக்கப்பட்டுகின்றன. 35,000 அரசுப் பள்ளி ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கட்டுமானப் பணியாளா்கள், சாலையோர வியாபாரிகள், பெண்கள் மற்றும் பொருளாதாரரீதியில் பின்தங்கியுள்ளா்களுக்கு ரூ.500 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சா்வதேச முதலீடு மாநாட்டின் மூலம் ரூ.14,000 கோடி முதலீடு ஈா்க்கப்பட்டுள்ளது.

இங்குள்ள அனைத்து மக்களுக்கும் இலவச மருத்துவக் காப்பீடு அளிக்கப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு பலன்களை ஜம்மு-காஷ்மீா் மக்கள் அடைந்து வருகின்றனா். இங்கு வளா்ச்சிக்குத் தடையாக இருந்த சிறப்பு அந்தஸ்து, ரத்து செய்யப்படதன் மூலமே இது சாத்தியமாகி வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com