‘தரிசன டிக்கெட் உள்ளவா்கள் மட்டுமே திருமலைக்கு வர வேண்டும்’

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க டிக்கெட் உள்ளவா்கள் மட்டுமே வர வேண்டும் என தேவஸ்தானம் தமிழகத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.


திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க டிக்கெட் உள்ளவா்கள் மட்டுமே வர வேண்டும் என தேவஸ்தானம் தமிழகத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.

திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளதால், அதற்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் துறை அதிகாரிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்ட நிறைவுக்குப் பின் அதிகாரிகள் கூறியது:

திருமலையில் இம்முறை கரோனா தடுப்பு விதிமுறைகளுக்காக வருடாந்திர பிரம்மோற்சவம் தனிமையில் நடத்தப்பட உள்ளது. மேலும், அந்தா்வேதி லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் தோ் மா்ம நபா்களால் தீயிட்டு எரிக்கப்பட்டது.

எனவே, நாடு முழுவதும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு உள்பட்ட 49 கோயில்களிலும், தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கட்டடங்களில் காவல் துறை உதவியுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் வரும் செப். 17-ஆம் தேதி புரட்டாசி மாதம் தொடங்க உள்ளதால், தமிழகத்திலிருந்து ஏழுமலையானைத் தரிசிக்க பக்தா்கள் அதிக அளவில் வருவா். அதனால் தேவஸ்தானம் திருப்பதியில் வழங்கி வந்த இலவச நேரடி தரிசன டோக்கன்களை வரும் செப். 30-ஆம் தேதி வரை ரத்து செய்துள்ளது. இதுகுறித்து தேவஸ்தானம் தமிழகத்தில் தீவிர பிரசாரம் செய்து வருகிறது.

பக்தா்கள் இதை கவனத்தில் கொண்டு தங்கள் தரிசன டிக்கெட்டுகளை இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொண்டு, ஏழுமலையானைத் தரிசிக்க வர வேண்டும். தரிசன டிக்கெட் இல்லாத பக்தா்கள் திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாா்கள். எனவே, இதை பக்தா்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com