ம.பி. இடைத்தேர்தல்: பிரசாரத்தைத் தொடங்கியது காங்கிரஸ்

​மத்தியப் பிரதேசத்தில் 27 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் இன்று (சனிக்கிழமை) பிரசாரத்தைத் தொடங்கியது.
கமல்நாத். (கோப்புப்படம்)
கமல்நாத். (கோப்புப்படம்)


மத்தியப் பிரதேசத்தில் 27 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் இன்று (சனிக்கிழமை) பிரசாரத்தைத் தொடங்கியது.

அகர் மால்வா மாவட்டத்திலுள்ள பிரபல பகளாமுகி கோயிலில் தரிசனம் மேற்கொண்ட காங்கிரஸ் மாநிலத் தலைவர் கமல்நாத் பிரசாரத்தைத் தொடங்கி வைத்தார். எம்எல்ஏ-க்கள் சஜ்ஜன் சிங் வர்மா மற்றும் ஜவிவர்தன் சிங்  ஆகியோர் உடனிருந்தனர்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் புபேந்திர குப்தா, "வளமான மத்தியப் பிரதேசத்துக்காக கோயிலில் பிரார்த்தனை செய்து எங்களது பிரசாரத்தைத் தொடங்கியுள்ளோம்" என்றார். அகார் தொகுதி வேட்பாளர் விபின் வான்கடேவை ஆதரித்து கமல்நாத் பொதுக்கூட்டத்தில் பேசினார். 

இடைத்தேர்தலுக்கு முதற்கட்டமாக 15 வேட்பாளர்களை வெள்ளிக்கிழமை அறிவித்த நிலையில், இன்று காங்கிரஸ் பிரசாரம் துவங்கியுள்ளது. 

பாஜக பிரசாரம்:

இடைத்தேர்தலுக்கு பிரசாரம் மேற்கொள்வது பற்றி பாஜக செய்தித்தொடர்பாளர் தீபக் விஜய்வர்கியா தெரிவிக்கையில், "தேர்தல் ஆணையத்தால் இடைத்தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பிறகு, வேட்பாளர்களை அறிவித்து முறையாக பிரசாரத்தை மேற்கொள்வோம்" என்றார். 

கமல்நாத் தலைமையிலான அரசின் அங்கமாக இருந்து, ராஜிநாமா செய்த காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 25 பேரில் 22 பேர் ஜோதிராதித்யா சிந்தியா தலைமையின் கீழ் கடந்த மார்ச் மாதம் பாஜகவில் இணைந்தனர். இதனால், அங்கு ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. அதன்பிறகு, மேலும் 3 எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா செய்து பாஜகவில் இணைந்தனர். இதுதவிர்த்து, 2 எம்எல்ஏ உயிரிழந்தனர்.

இதையடுத்து, 27 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com