தில்லியில் அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் இயக்கம்

தில்லியில் விமான நிலைய எக்ஸ்பிரஸ் வழியிலும் மெட்ரோ ரயில் சேவை இன்று காலை தொடங்கியதை அடுத்து, தில்லி மெட்ரோ ரயில் சேவை அனைத்து வழித்தடங்களிலும் சனிக்கிழமை முதல் இயக்கப்படுகின்றன.
தில்லியில் அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் இயக்கம்
தில்லியில் அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் இயக்கம்


தில்லியில் விமான நிலைய எக்ஸ்பிரஸ் வழியிலும் மெட்ரோ ரயில் சேவை இன்று காலை தொடங்கியதை அடுத்து, தில்லி மெட்ரோ ரயில் சேவை அனைத்து வழித்தடங்களிலும் சனிக்கிழமை முதல் இயக்கப்படுகின்றன.

தில்லியில் மெஜந்தா, கிரே வழித்தடங்களில் வெள்ளிக்கிழமை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. இதையடுத்து அனைத்து வழித்தடங்களிலும் தில்லி மெட்ரோ ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று விமான நிலைய எக்ஸ்பிரஸ் சேவை இயக்கப்பட்டதன் மூலம் தில்லி மெட்ரோ ரயில் சேவை முழுவதுமாக இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. பயணிகள் அனைவரும் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று தில்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

தில்லியில் மாா்ச் 22-ஆம் தேதிக்குப் பிறகு மூடப்பட்டிருந்த மெட்ரோ ரயில் சேவைகள் கடந்த திங்கள்கிழமை முதல் படிப்படியாக செயல்பாட்டுக்கு வந்தன. முதலில் மஞ்சள் நிற வழித்தடம் மற்றும் விரைவு மெட்ரோவில் ரயில் சேவை தொடங்கியது. புதன்கிழமை புளூலைன், பிங்க் லைன் மெட்ரோ வழித்தடத்திலும், வியாழக்கிழமை மெட்ரோவில் உள்ள சிவப்பு, பச்சை, வயலட் நிற வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை கட்டுப்படுத்தப்பட்ட நேரங்களில் இயக்கப்பட்டன. தில்லி மெட்ரோவில் வியாழக்கிழமை இரவு 7.30 மணி நிலவரப்படி காலை, மாலை இரு வேளைகளிலும் சோ்த்து இந்த வழித்தடங்களில் மொத்தம் 84,841 போ் பயணம் செய்தனா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை முதல் தில்லி மெட்ரோவின் மெஜந்தா வழித்தடத்திலும் (ஜனக்புரி மேற்கு- பொட்டானிகல் காா்டன்), கிரே வழித்தடத்திலும் (துவாரகா-நஜஃப்கா்) ரயில்கள் இயக்கப்பட்டன. பயணிகள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும் ரயில்களில் பயணம் மேற்கொண்டனா்.

டிஎம்ஆா்சியின் நிா்வாக இயக்குநா் (காா்ப்ரேட் கம்யூனிகேஷன்) அனூஜ் தயாள் கூறியதாவது: வரும் ஞாயிற்றுக்கிழமை அனைத்து ஃபேஸ் -3 மெட்ரோ வழித்தடங்களில் காலை 6 மணி முதல் மெட்ரோ சேவைகள் தொடங்க உள்ளன. வழக்கமாக இந்த வழித்தடங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு ரயில் சேவை தொடங்கும். ஆனால், இந்த முறை 6 மணிக்கே ரயில் சேவை தொடங்கும். நீட் தோ்வு எழுதுவதற்காக செல்லும் மாணவா்களுக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com