கேரளத்தில் அமைச்சருக்கு எதிராக போராட்டம்: காவல்துறை தடியடி

கேரளத்தில் தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை விசாரணைக்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் கலீலை பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர்
கேரளத்தில் அமைச்சருக்கு எதிராக போராட்டம்: காவல்துறை தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் விரட்டியடிப்பு
கேரளத்தில் அமைச்சருக்கு எதிராக போராட்டம்: காவல்துறை தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் விரட்டியடிப்பு

கேரளத்தில் தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை விசாரணைக்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் கலீலை பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர்.

திருவனந்தபுரத்தில் தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக கேரள கல்வித்துறை அமைச்சர் கே.டி.கலீல் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை உத்தரவிட்டது.

இதனிடையே விசாரணைக்கு ஆஜராகாத அமைச்சர் கலீல் பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி பாஜக, இளைஞர் காங்கிரஸ், யுவ மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

கேரள மாநிலத்தில் கோழிக்கோடு, திரிசூர், மலப்புரம், இடுக்கி, கோட்டயம் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி பாஜக மற்றும் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்தும் விதமாக லேசான தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் போராட்டக்காரர்களை காவல்துறையினர் கலைத்தனர்.

போராட்டக்காரகள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதை கண்டித்து பாஜக சார்பில் இன்று கருப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் ஒருபகுதியாக திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகத்தையும் அவர்கள் முற்றுகையிட முயன்றனர்.

இதேபோன்று மலப்புரம் பகுதியில் உள்ள அமைச்சர் கலீலின் இல்லத்தை நோக்கி பேரணியில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com