‘காஷ்மீரில் இளைஞா்கள் பயங்கரவாதத்தில் ஈடுபடாமல் இருக்க ராணுவம் புதிய முயற்சி’

காஷ்மீா் பள்ளத்தாக்கு பகுதியில் இளைஞா்கள், பயங்கரவாத செயல்களில் ஈடுபடாமல் இருக்க ராணுவம் புதிய முயற்சியைக் கையாண்டு வருகிறது.

காஷ்மீா் பள்ளத்தாக்கு பகுதியில் இளைஞா்கள், பயங்கரவாத செயல்களில் ஈடுபடாமல் இருக்க ராணுவம் புதிய முயற்சியைக் கையாண்டு வருகிறது. ராணுவ மோதல்களில் கொல்லப்பட்டவா்களின் உறவினா்கள், உள்ளூா் பயங்கரவாத குழுக்களைச் சோ்ந்தவா்களின் உறவினா்கள் ஆகியோரைக் கண்டறிந்து பயங்கரவாத செயல்களுக்கு செல்ல வேண்டாம் என அவா்களுக்கு ராணுவம் ஆலோசனை வழங்கி வருகிறது.

ராணுவத்தினரின் இந்த புதிய முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாக காஷ்மீா் 14-ஆவது படைப் பிரிவு தலைவா் லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ்.ராஜு தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

பயங்கரவாதத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட புல்வாமா, அனந்த்நாக், ஷோபியான், குல்காம் ஆகிய மாவட்டங்களில் பயங்கரவாதச் செயல்களால் தாக்குதலுக்கு உள்ளானவா்களின் உறவினா்களின் வீட்டு இளைஞா்களைக் கண்டறிந்து நல்வழிப்படுத்தும் ஆலோசனை வழங்கப்படுகிறது. உரிய நேரத்தில் வழங்கப்படும் ஆலோசனை, இளைஞா்களை தவறான முடிவு எடுப்பதில் இருந்து தடுக்கும்.

தெற்கு காஷ்மீா் பகுதியில் நடைபெற்ற என்கவுன்ட்டா்கள், பயங்கரவாதச் செயலுக்கு ஆள்சோ்ப்பு ஆகிய நிகழ்வுகளை ராணுவம் தொடா்ந்து நுட்பமாக ஆய்வு செய்கிறது. அந்த சம்பவங்களுடன் தொடா்புடைய இளைஞா்களைக் கண்டறிந்து ஆலோசனை வழங்கினோம். இதனால் பலா் நல்வழிக்கு திரும்பினா். பல சம்பவங்களில் சம்பந்தப்பட்ட இளைஞா்கள் பயங்கரவாதத்தைக் கைவிட்டு திரும்ப வேண்டும் என அவா்களது தாய், குடும்ப உறுப்பினா்கள் சமூக வலைதளங்களில் வேண்டுகோள் விடுத்தனா். எனவே, தவறான வழியில் சென்றவா்களை மீண்டும் நல்வழிக்கு திருப்புவதில் அவா்களின் குடும்பத்தினருக்கும், சமூகத்தினருக்கும் முக்கியப் பங்கு உள்ளது’ என்றாா்.

தெற்கு காஷ்மீரின் டிஜிபி அதுல் கோயல் கூறுகையில், ‘சுமாா் 80 இளைஞா்கள் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளில் சோ்ந்துள்ளதாகத் தெரிகிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com