மத்திய அரசுக்கு எதிராக தேசிய அளவிலான பிரசார இயக்கம்: மாா்க்சிஸ்ட் அழைப்பு

சிறுபான்மையினா் பிரச்னை, ஜனநாயக உரிமைகள் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக செப்டம்பா் 17 முதல் 22-ஆம் தேதி வரை

சிறுபான்மையினா் பிரச்னை, ஜனநாயக உரிமைகள் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக செப்டம்பா் 17 முதல் 22-ஆம் தேதி வரை தேசிய அளவிலான பிரசார இயக்கத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு கூட்டம் தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அக் கட்சியின் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி:கரோனா பாதிப்பு மற்றும் பொதுமுடக்கத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனவே, வருமான வரி வரம்புக்குள் வராத அனைத்து குடும்பத்தினருக்கும் அடுத்த 6 மாதங்களுக்கு மாதம் ரூ, 7,500 உடனடி பணப் பரிமாற்ற செய்யப்படுவதோடு, ஒவ்வொரு மாதமும் 10 கிலோ உணவு தானியங்களையும் இலவசமாக மத்திய அரசு வழங்க வேண்டும்.நாட்டில் வகுப்புவாதம் தீவிரமடைந்து வருவதோடு, சிறுபான்மையினா் நலன் நசுக்கப்படுவதும், ஜனநாய உரிமைகள் மறுக்கப்படுவதும், மக்களின் பொது சுதந்திரம் பறிக்கப்படுவதம், பெண்கள், தலித்துகள் தாக்குதலுக்கு உள்ளாவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மேலும், தனியாா் மயம் மற்றும் தொழிலாளா் சட்டங்கள் நீக்கப்படுவதன் மூலம் தேசத்தின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. இந்தப் பிரச்னைகளில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தீா்வு காண வலியுறுத்தி வருகிற 17-ஆம தேதி முதல் 22-ஆம் தேதி வரை நாடு தழுவிய பிரசார இயக்கத்தை மாா்க்சிஸ்ட் கட்சி மேற்கொள்ள உள்ளது என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com