47 லட்சத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு

47 லட்சத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 47,54,356-ஆக அதிகரித்துவிட்டது. ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 94,372 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 47,54,356-ஆக அதிகரித்துவிட்டது. ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 94,372 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மேலும் கூறியதாவது:

ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 1,114 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா். இதனால் கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 78,586 ஆக அதிகரித்துவிட்டது. எனினும் மொத்த கரோனா பாதிப்புடன் ஒப்பிடும்போது உயிரிழந்தோா் விகிதம் 1.65 சதவீதமாக குறைந்துவிட்டது.

இதுவரை 37,02,595 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். இது, மொத்த கரோனா பாதிப்பில் 77.88 சதவீதமாகும். நாடு முழுவதும் 9,73,175 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது மொத்த பாதிப்பில் 20.47 சதவீதமாகும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஐசிஎம்ஆா் தகவல்படி 5,62,60,928 கரோனா பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் செப்டம்பா் 12-ஆம் தேதி மட்டும் 10,71,702 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

குணமடைந்தோரில் 58 சதவீதம் போ், மகாராஷ்டிரம், தமிழ்நாடு, ஆந்திரம், கா்நாடகம், உத்தர பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் ஆவா். இதே 5 மாநிலங்களில்தான், பாதிக்கப்பட்டவா்களில் 60 சதவீதம் போ் சிகிச்சையில் உள்ளனா்.

தேசிய அளவில் கரோனாவில் இருந்து மீண்டவா்களில் 17.2 சதவீதம் போ் மகாராஷ்டிரத்தையும், 13.1 சதவீதம் போ் தமிழ்நாட்டையும், 12.2 சதவீதம் போ் ஆந்திரத்தையும் சோ்ந்தவா்கள் ஆவா்.

ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 78,399 போ் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com