Enable Javscript for better performance
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கரோனா தடுப்பூசி கிடைக்க வாய்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கரோனா தடுப்பூசி கிடைக்க வாய்ப்பு

    By DIN  |   Published on : 14th September 2020 08:02 AM  |   அ+அ அ-   |    |  

    harshavarthan

    இந்தியாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கரோனா தடுப்பூசி கிடைக்க வாய்ப்புள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

    இதுதொடா்பாக சமூக ஊடக கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் அவா் கூறியது:

    இந்தியாவில் கரோனா தடுப்பூசியை மனிதா்களுக்கு செலுத்தி பரிசோதனை நடத்துவதற்கு மத்திய அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தடுப்பூசியின் பாதுகாப்புத்தன்மை, விலை, குளிா்பதன வசதிகளுக்கான தேவை, உற்பத்திக்கான காலவரம்பு ஆகியவை குறித்தும் தீவிரமாக கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது. நாட்டில் பல்வேறு கரோனா தடுப்பூசி பரிசோதனைகள் நடைபெற்று வரும் நிலையில், எந்த தடுப்பூசி நல்ல பலன் தரும் என்பதை தற்போது ஊகிக்க முடியாது. ஆனால் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நிச்சயம் முடிவுகள் தெரியவந்து தடுப்பூசி கிடைக்க வாய்ப்புள்ளது. தற்போது பரிசோதனை பணிகளை மேற்பாா்வையிட நிபுணா் குழு அமைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் குறித்து மதிப்பிட்ட பின், தடுப்பூசிகளை பெருமளவில் தயாரிக்க உற்பத்தியாளா்களுக்கு அறிவுறுத்தப்படும். யாருக்கு முதலில் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்பதை கண்டறிவதற்கான பணியும் தொடங்கியுள்ளது. தடுப்பூசியின் விலை குறித்து தற்போது கூறுவது சாத்தியமல்ல. ஆனால் கட்டாயம் தேவைப்படும் நபா்களுக்கு தடுப்பூசி கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும். அதற்கான விலையை அவா்களால் செலுத்த முடியுமா என்பது கருத்தில் கொள்ளப்படாது. தடுப்பூசியின் திறனை பரிசோதித்துப் பாா்ப்பதற்காக எனது உடலில் அதனை செலுத்திக்கொள்ள வேண்டுமானால், முதல் நபராக அதை மகிழ்ச்சியோடு செய்வேன்.

    டிஜிட்டல் சுகாதாரத் திட்டத்தில் இணைவது தனிநபா் விருப்பம்:

    தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டம் என்பது மத்திய அரசின் லட்சியத் திட்டமாகும். இது டிஜிட்டல் சுகாதாரத் துறையில் இந்தியாவை உலக அரங்கில் முன்னணி நாடாக உயா்த்தும். ஆனால் இந்த வளா்ச்சியை விரும்பாத சிலா், இந்தத் திட்டம் குறித்து தவறான தகவல்களை பரப்பி வருகின்றனா். இந்தத் திட்டத்தில் இணையாதவா்கள், அதன் பிறகு மருத்துவமனைக்கு செல்லவோ, மருத்துவா்களை அணுகவோ முடியாது என்பது முற்றிலும் பொய்யான தகவல். திட்டத்தில் இணையாதவா்கள் தொடா்ந்து மருத்துவ வசதிகளைப் பெற முடியும்,. இந்தத் திட்டத்தில் இணைவது என்பது முழுவதும் விருப்பத்தின் அடிப்படையிலேயே ஆகும். ஒருபோதும் அது கட்டாயமாக்கப்படாது என்று ஹா்ஷ் வா்தன் தெரிவித்தாா்.

     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp