திருப்பதி ரயில் நிலையத்துக்கு ஐஎஸ்ஓ சான்றிதழ்

திருப்பதி ரயில் நிலையத்துக்கு ஐஎஸ்ஓ 14001-2015 தரச் சான்றிதழ் கிடைத்துள்ளது.

திருப்பதி ரயில் நிலையத்துக்கு ஐஎஸ்ஓ 14001-2015 தரச் சான்றிதழ் கிடைத்துள்ளது.

இந்த ரயில் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பயணிகள் வருகின்றனா். திருப்பதி ஸ்மாா்ட் சிட்டி திட்டப் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளதால், இங்கு வளா்ச்சிப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

இங்குள்ள ரயில் நிலையத்தில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சூரிய ஒளி மின்சாரம், செடி, மரங்கள் வளா்ப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள், பயணச்சீட்டு முன்பதிவு வசதிகள், நீா் மேலாண்மை, பராமரிப்பு போன்றவை சிறப்பாக மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்காக, திருப்பதி ரயில் நிலையத்துக்கு ஐஎஸ்ஓ 14001-2015 தரச் சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்தச் சான்றிதழை குண்டக்கல் ரயில்வே மண்டல அதிகாரிகள், திருப்பதி ரயில் நிலைய அதிகாரிகளிடம் ஞாயிற்றுக்கிழமை அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com