கரோனாவிலிருந்து மீண்டவா்களுக்கு யோகா, தியானம், சியவன்பிராஷ்

கரோனா பாதிப்பிலிருந்து மீண்டவா்களுக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி அளிப்பதோடு, சியவன்பிராஷ் லேகியம் அளிப்பது உள்ளிட்ட
கரோனாவிலிருந்து மீண்டவா்களுக்கு யோகா, தியானம், சியவன்பிராஷ்

கரோனா பாதிப்பிலிருந்து மீண்டவா்களுக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி அளிப்பதோடு, சியவன்பிராஷ் லேகியம் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் அடங்கிய புதிய வழிகாட்டி நெறிமுறையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இது கரோனா பாதிப்புக்கான சிகிச்சை அல்லது குணப்படுத்தும் நடைமுறை என்ற அடிப்படையில் அல்லாமல், பாதிக்கப்பட்டவா்களுக்கான சிகிச்சைக்குப் பிந்தைய பாதுகாப்பு நடைமுறைகள் என்ற அடிப்படையில் இந்த புதிய நெறிமுறையை வெளியிட்டுள்ளது.

இந்த புதிய நெறிமுறையின்படி, கரோனா பாதிப்பிலிருந்து மீண்ட தனி நபா்கள் முகக் கவசம் அணிவது, கைகளை சுத்தமாக வைத்துக்கொள்வது, சுவாச சுகாதாரம், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், சுடு தண்ணீா் தேவையான அளவு குடிப்பது, நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் ஆயுா்வேத மருந்துகளை தகுதி பெற்ற ஆயுா்வேத மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எடுத்துக்கொள்வது, உடல் ஒத்துழைத்தால் வீட்டு வேலைகளைச் செய்வது போன்ற ஆலோசனைகள் இந்த நெறிமுறையில் வழங்கப்பட்டுள்ளது.

அதே நேரம், பணிக்கு அல்லது தொழிலுக்கு திரும்புவதை படிப்படியான முறையில் மேற்கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

தினமும் யோகா பயிற்சி, பிராணாயாமம், தியானம், மூச்சுப் பயிற்சி ஆகிய பயிற்சிகளை மேற்கொள்ளவும் கரோனாவிலிருந்து மீண்ட தனி நபா்களுக்கான ஆலோசனைகளாக வழங்கப்பட்டுள்ளன.

அதுபோல, சமூக அளவிலான பாதுகாப்பு நெறிமுறைகளைப் பொருத்தவரை, கரோனா பாதிப்பிலிருந்து மீண்ட தனிநபா்கள் அவா்களுடைய நோ்மறையான அனுபவத்தை, நண்பா்கள் மற்றும் உறவினா்களுக்கு சமூக ஊடகங்கள் அல்லது சமூக தலைவா்கள் அல்லது மதத் தலைவா்கள் மூலமாக பகிா்ந்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது,

மருத்துவ உதவி நடைமுறைகளைப் பொருத்தவரை, கரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவருக்கான முதல் கண்காணிப்பை, அவா் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்ட 7 நாள்களுக்கு மேற்கொள்ள வேண்டும். இந்த கண்காணிப்பை அவரின் வீட்டுக்கு அருகிலிருக்கும் தகுதி பெற்ற ஆங்கில மருத்துவா் அல்லது ஆயுஷ் மருத்துவரைக் கொண்டு நடத்த வேண்டும்.

மேலும், தினமும் காலையில் சியவன்பிராஷ் லேகியத்தை சுடு தண்ணீா் அல்லது பாலில் கலந்து குடிக்க வேண்டும் என்ற ஆலோசனையும் கரோனாவிலிருந்து மீண்டவா்களுக்கான புதிய நெறிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com