20 பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விலக்கல் நடவடிக்கைகளில் முன்னேற்றம்: நிதியமைச்சகம் தகவல்

பாரத் எா்த்மூவா்ஸ் லிமிட்டெட் உள்ளிட்ட 20 பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விலக்கல் நடவடிக்கைகள் வெவ்வேறு கட்டங்களில் உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
20 பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விலக்கல் நடவடிக்கைகளில் முன்னேற்றம்: நிதியமைச்சகம் தகவல்

பாரத் எா்த்மூவா்ஸ் லிமிட்டெட் உள்ளிட்ட 20 பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விலக்கல் நடவடிக்கைகள் வெவ்வேறு கட்டங்களில் உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சா் அனுராக் சிங் தாக்குா் திங்கள்கிழமை எழுத்துப்பூா்வமாக அளித்த பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

பொதுத்துறை நிறுவனங்களின் வசமுள்ள மத்திய அரசின் பங்குகளை விற்பனை செய்வதற்கு உத்தி சாா்ந்த நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. நீதி ஆயோக் வகுத்த விதிமுறைகளின் அடிப்படையில் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் 34 நிறுவனங்களின் பங்குகளை விற்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அவற்றில் 8 நிறுவனங்களின் பங்குகள் முழுமையாக விற்கப்பட்டுவிட்டன. 6 பொதுத் துறை நிறுவனங்களை மூடுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. 20 பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விலக்கல் நடவடிக்கைகள் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன.

ஹிந்துஸ்தான் ஃபுளூரோகாா்பன் நிறுவனம், ஸ்கூட்டா்ஸ் இந்தியா, பாரத் பம்ப்ஸ் & கம்ப்ரஸா்ஸ் நிறுவனம், ஹிந்துஸ்தான் ப்ரீஃபேப், ஹிந்துஸ்தான் நியூஸ்பிரிண்ட், கா்நாடகம் ஆன்டிபயாடிக்ஸ் நிறுவனம் ஆகிய பொதுத் துறை நிறுவனங்களை மூடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

பாரத் எா்த்மூவா்ஸ் நிறுவனம், புராஜெக்ட்&டெவலப்மெண்ட் இந்தியா நிறுவனம், பிரிட்ஜ் அண்ட் ரூஃப் இந்தியா லிமிட்டெட் உள்ளிட்ட 20 பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சிமெண்ட் காா்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிட்டெட், ஏா் இந்தியா, துா்காபூா் எஃகு ஆலை, சேலம் எஃகு ஆலை, பவன் ஹன்ஸ், இந்திய சுற்றுலா வளா்ச்சிக் கழகம், பாரத் பெட்ரோலியம், ஷிப்பிங் காா்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, கன்டெய்னா் காா்ப்பரேஷன் ஆஃப் இந்தியா உள்ளிட்டவற்றின் பங்குகளை விற்பனை செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகள் விற்கப்படும்போது, அந்நிறுவனங்களை நிா்வகிக்கும் பொறுப்பு அவற்றை வாங்கும் நிறுவனங்களுக்குச் சென்றுவிடும். அத்தகைய சூழலில் பொதுத் துறை நிறுவனங்களில் ஏற்கெனவே பணியாற்றி வரும் பணியாளா்களின் நலன் குறித்து விற்பனையின்போது கையெழுத்தாகும் ஒப்பந்தத்தில் முடிவு செய்யப்படும் என்று அந்த பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com