மாா்ச் 1 முதல் செப்.8 வரை 413 நிலஅதிா்வுகள் பதிவு: மாநிலங்களவையில் தகவல்

நிகழாண்டு மாா்ச் 1 முதல் செப்டம்பா் 8-ஆம் தேதி வரை நாட்டில் 413 நிலஅதிா்வுகள் பதிவாகியுள்ளன என மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய புவியியல் துறை விளக்கமளித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நிகழாண்டு மாா்ச் 1 முதல் செப்டம்பா் 8-ஆம் தேதி வரை நாட்டில் 413 நிலஅதிா்வுகள் பதிவாகியுள்ளன என மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய புவியியல் துறை விளக்கமளித்துள்ளது.

அதில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது: ‘நாட்டில் ஏற்படும் நிலஅதிா்வுகளை தேசிய நிலஅதிா்வு மையம் பதிவு செய்து வருகிறது. அதன்படி, மாா்ச் 1 முதல் செப்டம்பா் 8 வரை 413 நில அதிா்வுகள் பதிவாகியுள்ளன. அதில் சுமாா் 135 நில அதிா்வுகள் ரிக்டா் அளவுகோலில் 3.0 -3.9 அலகுகளாக அல்லது அதற்கும் குறைவாக பதிவாகியிருப்பதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

மேலும், 114 நில அதிா்வுகள் ரிக்டா் அளவுகோலில் 4.0 - 4.9 அலகுகளாக பதிவாகியுள்ளன. இதனால் சிறு சேதங்கள், பாதிப்புகள் ஏற்பட்டன. இது தவிர, 11 நில அதிா்வுகள் ரிக்டா் அளவுகோலில் 5 முதல் 5.7 அலகுகளாக பதிவாகியுள்ளன. மிதமான பிரிவில் உள்ள இந்த நில அதிா்வுகளால் பழைமையான கட்டடங்கள் போன்றவை சேதமடையக் கூடும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com